மே 25, 2008
பின்னூட்டங்களில் தென்படும் பெயர்களுக்குரியவர்கள் பெரும்பாலும் இன்னொரு சக பதிவராகவே இருக்கின்றார். பதிவரல்லாத தனியே வலைப்பதிவு வாசகர்களிடமிருந்து வெளிவரும் மறுமொழிகள் ஒப்பீட்டு அளவில் குறைவானதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். (அல்லது வலைப்பதிவுலகில் எழுதுபவர்களே படிப்பவர்களாயும் படிப்பவர்களே எழுதுபவர்களாயும் இருக்கிறார்கள் என்பது உண்மையகவும் இருக்கலாம்)
வலைப்பதிவொன்றைப் படிக்கும் பதிவரல்லாத வாசகர் ஒருவர் இடுகை குறித்த தன் கருத்தை இலகுவாகச் சொல்லி விட்டுப் போக பின்னூட்டப் பெட்டிகளிலேயே இணைக்கப்பட்டிருக்கும் தமிழில் உள்ளிடும் முறைகள் உதவக் கூடும். அவ்வாறான ஒரு முறையை எனது பின்னூட்டப் பெட்டியிலும் இணைத்துள்ளேன்.
பாமினி தமிங்கிலம் தமிழ் 99 முறைகளில் பயனர் தனது தெரிவினை அழுத்திய பின்னர் நேரடியாக யுனிகோடில் எழுதும் வாய்ப்பினை இது தருகிறது. ஏற்கனவே எனது பழைய புளொக்கரில் பயனில் இருந்த பாமினி தமிங்கில உள்ளிடும் முறைகளோடு தமிழ் 99 உள்ளிடும் முறையையும் சேர்த்திருக்கின்றேன்.
மேலும் தொடருங்கள்
மறுமொழி இல்லை » |
கணிணித் தமிழ், வலைப் பதிவு | குறிச்சொல்லிடப்பட்டது: தமிழ் பின்னூட்டம் |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் masdooka
மே 8, 2008
இணையதளம் இன்று நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் உரையாடல்கள், மின் அஞ்சல் பரிமாற்றங்கள், நமது கருத்துக்களைத் தெரிவித்தல் மற்றும் விவரங்களைத் தேடுதல் போன்ற பல காரணங்களுக்காக நம்மில் பலர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறோம்.
உங்களது நெருங்கிய கல்லூரித் தோழர் ஒருவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது எவ்வளவு அற்புதமாக இருக்கும்?
நீங்கள் நன்கு அறிந்துள்ள ஒரு விஷயத்தைப் பற்றிய கருத்தைத் தெரிவிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் ஒரு சிறந்த திரைப்படவிமர்சகராக இருப்பின், இணையத்தளத்தில் உங்கள் விமர்சனங்களை நீங்கள் ஏன் வெளியிடக்கூடாது? உங்களுக்குக் விவரங்கள் ஏதேனும் தேவைபடுகிறதா? அது சமையல் குறிப்புகள், தேர்தல் விவரங்கள் போன்ற எதுவாக இருப்பினும் ஒரு பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் இவ்வனைத்தும் உங்களுக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
மேலும்……
5 மறுமொழிகள் |
இணையம், கணிணித் தமிழ் | குறிச்சொல்லிடப்பட்டது: கூகிள், தமிழில் |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் masdooka
மே 7, 2008
இணைய உலகில் புதிதாக அடி எடுத்து வைத்திருக்கிறீர்களா? பல்வேறு தமிழ் வலைப்பதிவுகளைப் பார்த்து படித்து ரசித்து விட்டு, ஆகா நாமும் இப்படி ஒரு வலைப் பதிவு தொடங்கலாமே” நமது எழுத்துக்களையம் கருத்துக்களையும் எழுதலாமே என ஆசைப்படுகிறீர்களா?
மிகவும் சுலபமாக தமிழ் வலைப்பதிவு தொடங்க எளிய வழிமுறைகள்
புதிய தமிழ் வலைப்பதிவு தொடங்க இங்கே கிளிக்கவும். கவலையே படாதீர்கள் முற்றிலும் இலவசம் தான்.
மறுமொழி இல்லை » |
வலைப் பதிவு | குறிச்சொல்லிடப்பட்டது: வலைப் பதிவு |
நிரந்தர பந்தம்
பதிந்தவர் masdooka