நொடிக்கு ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் (Petaflops) கணக்கீடுகளை நிகழ்த்தும் அதிவிரைவுக் கணினி (Supercomputer) களை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனம் IBM, தற்போது அதனைச் சாத்தியப் படுத்தியுள்ளது.
கணினி உலகில் நன்கு அறியப்பட்ட IBM நிறுவனமும், நியூ மெக்சிகோவிலிருக்கும் லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வுச் சாலையும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட்ரன்னர்’ (Roadrunner) என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
IBM இதற்கு முன் உருவாக்கிய அதிவிரைவுக் கணினியான ப்ளூ ஜீன் (Blue Gene)-ஐக் காட்டிலும் இது இருமடங்கு வேகமாக செயல்படும். ஓர் ஒப்பீட்டிற்காக ப்ளூ ஜீன் அதிவிரைவுக் கணினி அதற்கடுத்த அதிவிரைவுக் கணினியைவிட மும்மடங்கு வேகத்தில் கணக்கீடுகள் செய்ய இயலும்.
