WordPress X Blogger

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பிளாகர் தவிர வேறறியேன் பராபரமே” என்று இருந்துவிட்டு தனித்தளத்தில் WordPress பயன்படுத்தத் தொடங்கியதும் தான் WordPressன் அருமை புரிபடத் தொடங்கியது. பிளாகருக்கும் நிறைகள் உண்டு என்பதால், பிளாகரின் குறைகளை அதிகம் சுட்டிக் காட்டாமல் WordPressன் நிறைகளை மட்டும் சுட்டிக் காட்டலாம் என்று நினைக்கிறேன்.

WordPressன் நிறைகள்:

1. WordPress ஒரு கட்டற்ற மென்பொருள். மற்ற அனைத்து நன்மைகளுக்கும் இந்த சிறப்பே அடிப்படை. WordPress.comல் இலவசமாக வலைப்பதிவுகளை உருவாக்கிக் கொள்ள இயல்வது போக, இம்மென்பொருளை பதிவிறக்கி நிறுவி நம் சொந்தத் தளத்தில் இருந்தும் வலைப்பதியலாம். பயனர்களால் உருவாக்கப்படும் மென்பொருள் என்பதால், WordPressன் புதிய பதிப்புகள் அடிக்கடி வெளியாகிக் கொண்டே இருக்கும். இதனால் அண்மைய வலைப்பதிவு நுட்பங்கள் நமக்கு உடனடியாகக் கிடைக்கும். WordPress உருவாக்கும் தன்னார்வலர் குழுவை அணுகி நமக்குத் தேவையான வசதிகளை பெற்றுக் கொள்ள இயலும். பிளாகரின் புதிய பதிப்பு அனைவருக்கும் வரும் வரை காத்திருப்பது போலவோ விரும்பாவிட்டாலும் புதிய பதிப்புக்கு மாறுவது போலவோ WordPressல் கிடையாது.

2. எண்ணற்ற அழகழகான WordPress வார்ப்புருக்கள், பயனுள்ள நீட்சிகள் கிடைக்கின்றன. இந்த நீட்சிகள் மூலம் பல சிறப்பான வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். இவற்றைப் பட்டியல் போட்டால் நீளும்.

மேலும்…….

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்