செல்பேசியில்(Mobile Phone) இருந்து கணினிக்கும், கணினியில் இருந்து செல்பேசிக்கும் கோப்புகளைப் பகிர்வதற்கு(File sharing) எத்தனையோ இலவச மென்பொருட்கள் (Freeware Applications) இணையத்தில் வகைதொகையில்லாமல் கொட்டிக்கிடக்கின்றன.
கணினி கைவசம் இருந்தும் இது பற்றித் தெரியாமல், செல்பேசியில் 3GP, AMR, MP3 கோப்புகளைப் பதிவதற்குக் கடைக்காரரிடம் 150 ரூபாய் வரை செலவழித்தான் எனது நண்பன்.
அவனிடம் இந்த இலவச மென்பொருட்களைப் பற்றிச் சொன்னேன். அவன் ‘டேய்!. ஒரு டுபாக்கூர் நோக்கியா 1110i தானேடா உன்னிடம் உள்ளது. உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?” என்றான்.
“அடடா இங்கே சிட்டியில் இருக்கும் போக்குவரத்துக்கும், செல்பேசித்திருடர்களிடம் இருந்து தப்பிப்பதற்குமே – அந்த நோக்கியா 1110i செல்லை நான் இன்னும் பயன்படுத்துகிறேன். ஆனால் என் துணைவியார் வைத்திருப்பது கொஞ்சம் உயர் ரகம்”, என்றேன்.
