NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

நவம்பர் 2, 2009
Tuesday, October 28, 2008

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

  1. NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  2. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  3. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  5. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  6. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  7. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  8. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை. 

                                   மேலும்……….


Defragmentation செய்ய இலவச மென்பொருள் – Power Defragmenter 3.0

அக்டோபர் 30, 2009
துண்டாக்கல் (Fragmentation) என்றால் என்ன ?
வன்தட்டில் கோப்புகளை சேமிக்கும் போது,கோப்புகள் ஒரே இடத்தில் சேமிக்கபடுவதில்லை.வன்தட்டில் காலியாக உள்ள இடத்தில்,கோப்புகள் துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு சேமிக்கப்படும்.எந்த வகை கோப்புகள் ஆனாலும் ,அதன் அளவு எவ்வளவு பெரிதாயினும் இவ்வாறே சேமிக்கப்படும்.

 

ஏன் Defragmentation செய்ய வேண்டும் ?
வன்தட்டில் சேமித்த கோப்புகளை ,நாம் பயன்படுத்தும்போது ,கணினி ஆங்காங்கே
சேமிக்கபட்ட துண்டுகளை ஒன்றாக்கி கோப்புகளாக தரும். சிறிய கோப்புகளாக இருந்தால் ,கணினியினின் வேகம் குறைவது நமக்கு தெரிவதில்லை.இதுவே சற்று பெரிய கோப்புகளாக இருந்தால் ,அதனை ஒரு முழுமையான கோப்பாக மாற்ற கணினி நீண்ட நேரம் எடுத்து கொள்ளும்.இப்பிரச்சனை நம்மில் பலருக்கு உண்டு.
                                                             மேலும்…….

உங்கள் வீடியோ கோப்பை டிவிடியாக மாற்ற எளிய வழி

அக்டோபர் 30, 2009

நண்பர்களே நீங்கள் வைத்திருக்கும் எந்த ஒரு வீடியோ கோப்பாக இருந்தாலும் அதை டிவிடி கோப்பாக மாற்றுவது எப்படி என்பதை இன்று படிப்படியாக விளக்குகின்றேன்.

அதற்கு இந்த மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்

                                                                                    தொடர்ந்து…….

நம் கணினி வேகமாக இயங்க வேண்டுமா?

அக்டோபர் 22, 2009

ம் கணினி மெதுவாக இயங்குவதற்கு முக்கிய காரணம்.நாம் கணினியில் பதிந்திருக்கும் ஹார்டுவர்கள்,மென்பொருட்களை அப்டேட் செய்யாமல் தொடர்ச்சியாக பயன்படுத்துவது தான்.

அந்த மென்பொருட்கள் அப்டேட் எச்சரிக்கையை கணினியின் திரையில் காட்டினாலும் நாம் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து கணினியை பயன்படுத்துவோம்.

அப்படி பயன்படுத்தும் போது ஒரு முக்கியமான வேலைகளை செய்யும் நேரங்களில் கணினி மக்கர் செய்யும்.

அப்போது தான் நாம் யோசிப்போம்.

அப்படி வந்த பிறகு யோசிப்பதை விட அவ்வப்போது அப்டேட் செய்தால் இந்த பிரச்சனையே தேவையில்லை.

அதற்கு இரண்டு இலவச மென்பொருட்கள் உள்ளன. அதை நம் கணினியில் நிறுவி விட்டு இயக்கினால் எந்தெந்த ஹார்டுவர்கள்,மென்பொருட்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று காட்டி கொடுக்கும் உடனே நாம் அப்டேட் செய்து விட வேண்டியது தான். இதை நாம் அவ்வப்போது செய்யும் போது கணினி இயங்கும் வேகம் சிறப்பாக இருக்கும்.

தொடர்ந்து…..


கணிணித் திரையை படம் பிடிக்க

ஜனவரி 2, 2009

கண்ணியை நீங்கள் உபயோகிக்கும்போது அல்லது ஏதேனும் ஒரு இணையப் பக்கத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது அந்தப் பக்கத்தை மட்டும் அப்படியே ஒரு படம் எடுத்து வைத்தால் உபயோகமாக இருக்குமே என் நினைக்கலாம். அதற்குரிய வழியை கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கி வீடியோவைப் பாருங்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.

இங்கே கிளிக்கவும்

http://video.about.com/graphicssoft/WinXPScreenshot-mov.–8z.htm


கணினியில் என்ன நடக்கிறது?

டிசம்பர் 14, 2008

உங்கள் கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் இந்தப் பதிவு உங்களுக்காகவே!

விண்டோஸ் இயங்குதளத்தில் (OS) என்ன நடந்துகொண்டு இருக்கிறது?

என்னென்ன செயல் (Process) கணினியில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது?

ஒவ்வொரு செயலுக்குப் பின்னனியில் இருக்கும் மர்மம் என்ன?

எவ்வளவு நினைவகம் (Memory) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது?

Micro Processorன் உபயோகம் எந்த அளவுக்கு உள்ளது?

எந்தெந்த dll கோப்புகள் தற்சமயம் உபயோகத்தில் உள்ளன?

எந்தெந்த IP முகவரியுடன் உங்கள் கணினி தற்போது இணைப்புடன் உள்ளது?

உங்கள் கணினியுடன் இணைந்துள்ள தொலைவில் உள்ள கணினிகளின் (Remote PC) IP முகவரிகள்?

தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் சேவைகளும், நிறுத்தப்பட்ட சேவைகளும் யாவை?

விண்டோஸ் ஆரம்பிக்கும்போது(Startup) எந்தெந்த செயல்களும் சேர்ந்து (Auto-start) ஆரம்பிக்கின்றன?

இயங்குதளத்தின் version, பயனர் பெயர் (User name), நினைவகக் கொள்ளளவு, Processor ஆகிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்வது எப்படி?

இது போன்ற பல வினாக்களுக்கு உரிய விடைகளை அறிய ஒரு இலவச மென்பொருள் இங்கே

மேலும் விபரங்கள் அறிய


செல்பேசி ==> கணினி ==> செல்பேசி

டிசம்பர் 14, 2008

செல்பேசியில்(Mobile Phone) இருந்து கணினிக்கும், கணினியில் இருந்து செல்பேசிக்கும் கோப்புகளைப் பகிர்வதற்கு(File sharing) எத்தனையோ இலவச மென்பொருட்கள் (Freeware Applications) இணையத்தில் வகைதொகையில்லாமல் கொட்டிக்கிடக்கின்றன.

கணினி கைவசம் இருந்தும் இது பற்றித் தெரியாமல், செல்பேசியில் 3GP, AMR, MP3 கோப்புகளைப் பதிவதற்குக் கடைக்காரரிடம் 150 ரூபாய் வரை செலவழித்தான் எனது நண்பன்.

அவனிடம் இந்த இலவச மென்பொருட்களைப் பற்றிச் சொன்னேன். அவன் ‘டேய்!. ஒரு டுபாக்கூர் நோக்கியா 1110i தானேடா உன்னிடம் உள்ளது. உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?” என்றான்.

“அடடா இங்கே சிட்டியில் இருக்கும் போக்குவரத்துக்கும், செல்பேசித்திருடர்களிடம் இருந்து தப்பிப்பதற்குமே – அந்த நோக்கியா 1110i செல்லை நான் இன்னும் பயன்படுத்துகிறேன். ஆனால் என் துணைவியார் வைத்திருப்பது கொஞ்சம் உயர் ரகம்”, என்றேன்.

மேலும்…..


புரட்சியை ஏற்படுத்தப்போகும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் கணினி

நவம்பர் 17, 2008
microsoft_surfaceடெஸ்க்டாப், மற்றும் லேப்டாப் கணினி வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, மிகவும் சிறப்பானதொரு கணினியாக, இரு புறமும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையிலான கணினியாக இன்று உலகளவில் இனம் கண்டறியப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புதான் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் கணினி.
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வணிக ரீதியிலான கணினி வகைகளுள் மிகவும் சிறப்பானதொரு கணினியாக, பல வகையிலும் மேம்படுத்தப்பட்ட கணினியாக விற்பனைக்காக வர உள்ளது. இக்கணினியின் மூலம் எண்ணற்ற பயன்களைப் பெற முடியும். எண்ணற்ற சலுகைகளை, வசதிகளை அனுபவிக்க முடியும்.
ஏராளமான வசதிகள் இக்கணினியில் உள்ளன. நம்முடைய சாதாரணத் தொடுதல், அங்க அசைவுகள் போன்றவற்றாலேயே இக்கணினியை மிக எளிதாக இயக்க முடியும். இக்கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள 30 இன்ச் நீள, அகலம் கொண்ட அகண்ட திரையில், நாம் கணினி திரையில் பார்க்கிறோம் என்ற உணர்வே தெரியாத அளவுக்கு மிகத் துல்லியமாகப் படங்கள் தெரியும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் கண் முன்னே ஒரு நபர் அமர்ந்து நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வுதான் கண்டிப்பாக, இக்கணினியின் முன் அமர்ந்துள்ளவர்களுக்குத் தோன்றும்.
 
அந்த அளவுக்குப் படக்காட்சிகள் தெள்ளத் தெளிவாக உள்ளன. இதன்மூலம், கணினி முன் அமர்ந்திருக்கும்போது ஏற்படும் சலிப்பு, எரிச்சல் போன்றவை இக்கணினியின் முன் அமர்ந்திருக்கும்போது ஏற்படாது. பார்க்க….பார்க்க ஒரு விதப் பரவச உணர்வு ஏற்படுவது நிச்சயம் என்பதால், இக்கணினியைப் பயன்படுத்தலாம்….பயன்படுத்தலாம்….தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேயிருக்கலாம். அந்த அளவுக்கு இந்தக் கணினியால் எதிரில் அமர்ந்திருப்பவர்களுக்கு எந்த ஒரு சலிப்பும் தட்டாது.

சர்ஃபேஸ் கணினி- ஓர் பார்வை


தற்போது புழக்கத்தில் உள்ள இதர சாதாரணக் கணினிகளில் இருந்து சர்ஃபேஸ் கணினி முற்றிலும் மாறுபட்டது என்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். மேலும், மற்ற சாதாரண கணினிகளைப் பயன்படுத்தும்போது பெறும் தகவல்களுக்கும், இந்தக் கணினியைப் பயன்படுத்தும்போது பெறும் தகவல்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன என்றும் மைக்ரோசாப்ட் கூறுகிறது. சர்ஃபேஸ் கணினியில் உள்ள நான்கு மிக முக்கிய அம்சங்கள் குறித்து மைக்ரோசாப்ட் பட்டியலிட்டுள்ளது. அவை:

1. நேரடித் தகவல் பரிமாற்றம்: பொதுவாகவே, ஒரு கணினியை இயக்குவதற்கு மௌஸ் அல்லது கீ போர்டு கண்டிப்பாகத் தேவை. அப்போதுதான், கணினியில் உள்ள தகவல்களை நம்மால் பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியும். ஆனால் சர்ஃபேஸ் கணினியை இயக்க மௌஸ் அல்லது கீ போர்டு எதுவுமே தேவையில்லை. நம்முடைய அங்க அசைவு அல்லது தொடுதல் மூலம் எந்த ஒரு தகவலையும் கேட்கவோ, பார்க்கவோ, அனுப்பவோ முடியும்.

2. பலமுனைத் தொடுதல்: பொதுவாகவே, டச் ஸ்கிரீன் முறைகளை எடுத்துக் கொண்டால், ஒரு நேரத்தில் ஒருவரால் மட்டுமே அதுவும் ஒரு முறை மட்டுமே அந்த ஸ்கிரீன்ஐ தொட்டு இயக்க முடியும். ஆனால், சர்ஃபேஸ் கணினியில் அப்படியில்லை. யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எவ்வளவு பேர் வேண்டுமானாலும், அதிலுள்ள டச் ஸ்கிரீன்ஐ தொட்டு இயக்கலாம். இப்படி ஒரே நேரத்தில் பலரும், பலவித வேலைகளைக் கொடுக்கும் போது, யாருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது? என கணினி குழம்பிப் போகாது. கண்டிப்பாக, அனைவரின் கட்டளையையும் பதிவு செய்து அதற்கு ஏற்றவாறு செயல்படும் திறன் கொண்டது.

3. பலமுனை பயன்பாடு: பொதுவாகவே, ஒரு கணினியை ஒருவரால்தான் இயக்க முடியும். அதிகபட்சம், இரண்டுபேர் அதனை இயக்கலாம். ஆனால், அதற்கும் மேற்பட்ட நபர்களால் கண்டிப்பாக இயக்கவே முடியாது. ஆனால், சர்ஃபேஸ் கணினியைப் பொறுத்தவரை, எவ்வளவு பேர் வேண்டுமானாலும், ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். தனியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. படத்துக்கு அங்கீகாரம்: பொதுவாகவே, கணினி திரையில் தெரியும் பிம்பங்களுக்குப் பெயர் சூட்டுவது வழக்கம். ஆனால், இதில், பெயர் சூட்டுவதற்குப் பதிலாகப் படங்களைக் கூட வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதற்கு சர்ஃபேஸ் கணினி பரிபூரண ஒத்துழைப்பு அளிக்கும். இதன்மூலம், டிஜிட்டல் வகை தகவல்களையும் படங்களை வைத்து எளிதில் அனுப்பிக் கொள்ளலாம்.

சர்ஃபேஸ் கணினி & வேலை செய்யும் விதம்


சர்ஃபேஸ் கணினியில் பிரத்யேகக் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கணினியின் முன் அமர்ந்துள்ள நபரின் அங்க அசைவுகளைக் கணினி புரிந்து கொள்ளும். அதுபோல், அவர் என்ன தொடுகிறார்? எதற்காக தொடுகிறார்? போன்ற விஷயங்களையும் மிக விரைவாக, எளிதாகப் புரிந்து கொள்ளும்.
 
இந்தக் கணினியில் இன்ஃப்ரா ரெட் எனப்படும் அகச்சிவப்புக் கதிரும் இருப்பதால், நாம் மேஜைக்கு அடியில் கை வைத்திருந்தாலும், அந்தக் கை அசைவின் தன்மையை சர்ஃபேஸ் கணினி எளிதில் இனம் கண்டு கொள்ளும். எனவே, அந்த கை நகர்வுக்கு ஏற்ப, திரையிலும் நகர்தல் இருக்கும். நம்மைத் தொடுவது கையா? அல்லது வேறு ஏதேனும் பொருளா? என்பதையும் சர்ஃபேஸ் கணினி எளிதாக இனம் கண்டு கொள்ளும். இதற்காக விஷேச லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, கை விரலுக்குப் பதிலாக, பெயின்ட் பிரஷ்ஷைக் கொண்டு கணினியை இயக்குகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்….
 
கணினியைத் தொடுவது கை விரலா? அல்லது பெயின்ட் பிரஷ்ஷா என்பதை சர்ஃபேஸ் கணினி நொடியில் புரிந்து கொண்டு, அதற்குத் தக்கபடி திரையில் தன் பதிலைத் தெரிவிக்கும். இதன் அகண்ட திரைதான், இதன் சிறப்பம்சமே. இந்தத் திரையைப் பொருத்துவதற்கு மேஜைதான் தேவை என்றில்லை. சுவற்றில் கூட அப்படியே மாட்டி வைக்கலாம். கண்ணாடி பொருத்தும் இடத்தில்கூட பொருத்திக் கொள்ளலாம். அவ்வளவு ஏன்….உங்கள் வீட்டு பிரிட்ஜ்ஜின் கதவில் கூட பொருத்திக் கொள்ளலாம். எடை அதிகமிருக்காது. வீட்டின் எந்த மூலையிலும் இதை எளிதாகப் பொருத்தி, இயக்கலாம். கையாளலாம்.

எப்போது வணிக ரீதியாக விற்பனைக்கு வரும்?


அமெரிக்காவிலுள்ள ஏ.டி.அண்டு டி., ஹராஹ் என்டர்டெயின்மென்ட், ஸ்டார்வூட் ஹோட்டல்ஸ் அண்டு ரிசார்ட்ஸ், டி&மொபைல்(யூ.எஸ்.ஏ.,) ஆகிய நிறுவனங்களைத்தான் தன்னுடைய அதிகாரப்பூர்வ வியாபாரப் பங்குதாரர்களாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு சர்ஃபேஸ் கணினிகளைத் தயாரித்து அனுப்பும் பணியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது முழு மூச்சில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அமெரிக்காவில் உள்ள சில்லரை விற்பனை நிலையங்களுக்கு சர்ஃபேஸ் கணினிகளைத் தயாரித்து அனுப்பும் முயற்சியில் மைக்ரோசாப்ட் இறங்கும்.
 
இப்போதே அமெரிக்காவில், சர்ஃபேஸ் கணினிக்கு ஏக வரவேற்பு கிடைத்துள்ளதாம். சில்லரை வணிகத்தில் விற்கத் தொடங்கினால், மற்ற நிறுவனக் கணினிகள் அனைத்தும் அப்படியே விற்காமல் நின்று போய்விடும். அந்த அளவுக்கு கணினி விற்பனை வரலாற்றில் சர்ஃபேஸ் கணினி ஒரு மிகப்பெரிய சகாப்தத்தையே ஏற்படுத்தப் போகிறது. இதன் வரவை அனைவரும் எதிர்நோக்கிக் காத்துள்ளனர். இன்னும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் சர்ஃபேஸ் கணினிகள் முழு வீச்சில் சில்லரை வணிகம் மூலம் கிடைக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

சர்ஃபேஸ் கணினி பற்றிய சில வீடியோ தொகுப்புகளும் இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தொகுப்பில், இந்தக் கணினியைப் பற்றிய முழு தகவல்களும் இடம் பெற்றுள்ளன. சர்ஃபேஸ் கணினியைப் பற்றி பார்த்திராத, கேட்டிராத, அறிந்திராத பல தகவல்கள் இந்த இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன.

இணையதளத்தில் சர்ஃபேஸ் கணினி


கீழே தரப்பட்டுள்ள இணையதள முகவரிகளில் சர்ஃபேஸ் கணினியைப் பற்றிய விவரங்களை நீங்கள் பார்த்து, தெரிந்து, அறிந்து கொள்ளலாம்.

Press Release: http://www.microsoft.com/presspass/presskits/surfacecomputing/default.mspx

Product Team Blog: http://blogs.msdn.com/surface/

Product Homepage: http://www.microsoft.com/surface/index.html

Product Demo Videos: http://www.microsoft.com/surface/videos.html

கட்டுரையாளர்  பற்றி


vinothகட்டுரையாளர் திரு:வினோத்குமார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரத்தியேகத் தயாரிப்புகளைப் பற்றி கட்டுரைகள் எழுதும் தொழில்நுட்ப எழுத்தாளர். இத்துறையில்  8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உண்டு. எழுத்தாளர் மட்டுமல்லாது, பேச்சாளரும் கூட. ஏராளமான பொதுக்கூட்டங்களில், கருத்தரங்குகளில் பேசியுள்ளார்.
அவரின் இணைய தளம்  www.ExtremeExperts.com என்ற இணையத்தளத்துக்கு வாருங்கள்.
 
அடுத்த தொடரில் சர்ஃபேஸ் வேலை செய்யும் விதம் பற்றிய தொடர்…. காத்திருங்கள்!!
 

வைரஸை கட்டுப்படுத்தும் வழிகள்

அக்டோபர் 15, 2008

எப்படி ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராமினைப் பெறுகிறது?

1. ஏற்கனவே வைரஸ் புரோகிராம் புகுந்த பைல்களை காப்பி செய்வது.

2. வைரஸ் கெடுத்த புரோகிராம்கள் அல்லது டேட்டா பைல்களைக் கம்ப்யூட்டருக்குள் கொண்டு வருவதன் மூலம்.

3. இன்டர் நெட்டிலிருந்து தகவல்கள் மற்றும் புரோகிராம்களை காப்பி செய்வதன் மூலம்.

4. இமெயில் கடிதங்கள் மூலம் ஒற்றிக் கொண்டு வருதல். வைரஸ் புரோகிராமினை நீக்குவது என்பது நேரத்தையும் நம் உழைப்பையும் அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளும் செயலாகும்.

 

அதைப் பார்க்கும் முன்னர் எப்படி அவை நம் கம்ப்யூட்டரில் தொற்றிக் கொள்வதனைத் தடுக்கலாம் என்று பார்க்கலாம். ஏனென்றால் வைத்தியம் செய்வதைக் காட்டிலும் தடுப்பு வழிகள் அதிக பாதுகாப்பானது அல்லவா!

1. உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸிற்கு எதிரான antivirus program வைத்திருந்தால் (Norton, McAfee, AVG, போன்றவை) உங்கள் பைல்களை ஸ்கேன் செய்வதற்கு முன் அதனை அப்டேட் செய்திடுங்கள். மேலும் பணம் செலுத்தி வாங்கியிருந்தால் அதற்கான காலம் இன்னும் முடியவில்லை என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பணத்திற்கான காலம் முடிந்திருந்தால் லேட்டஸ்ட் டாக வந்திருக்கும் வைரஸிற்கான விளக்கம் மற்றும் நீக்கும் புரோகிராம்களை அப்டேட் செய்திட முடியாது. இவ்வகையில் அப்டேட் செய்யாத ஆண்டி வைரஸ் புரோகிராம்களைக் கொண்டு ஸ்கேன் செய்வதில் பயனே இல்லை. ஏனென்றால் லேட்டஸ்ட்டாக வந்த வைரஸ்களை இவை கண்டறியாது.

2. அடுத்து உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்கும் முறைகளுக்கு வருவோம். இந்த புரோகிராமின் சிறிய ஐகான் நிச்சயம் உங்கள் சிஸ்டம் ட்ரேயின் வலது ஓரத்தில் மற்ற ஐகான்களுடன் இடம் பெற்றிருக்கும். பின்புலத்தில் இது இயங்கிக் கொண்டிருப்பதன் அடையாளம் இது. இதனை இருமுறை கிளிக் செய்தால் புரோகிராம் விண்டோ உங்களுக்குக் கிடைக்கும். இந்த ஐகான் இங்கு இல்லை என்றால் மற்ற புரோகிராம்களைப் பெறுவது போல Start மற்றும் All Programs சென்று இதனைப் பெறலாம்.

3. இப்போது உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் main page அல்லது control center கிடைக்கும். இங்கு ஆண்டி வைரஸ் புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளும் உங்களுக்குக் கிடைக்கும். முழுமையாகப் பார்த்து கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை ஸ்கேன் செய்வதற்கான டேப் அல்லது பட்டனில் கிளிக் செய்து அப்போது கிடைக்கும் விண்டோவில் எவ்வகை ஸ்கேன் மற்றும் எந்த பைல்கள் என்பதனையும் தேர்ந்தெடுத்து ஓகே கொடுத்தால் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் ஸ்கேன் செய்யப்படத் தொடங்கும். இதற்கு Scan டேப் கிளிக் செய்தவுடன் எந்த பைல்கள் அல்லது டிரைவ் எனத் தேர்ந்தெடுக்க ஒரு விண்டோ கிடைக்கும். முழுமையாகக் கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்திட Scan Computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே அனைத்து பைல்களும் டிரைவ் வரிசைப்படி ஸ்கேன் செய்யப்படும். இது ஒரு விண்டோவில் காட்டப் படும். அந்த ரிப்போர்ட் விண்டோவில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட் டால் அது அழிக்கபட்டதா? வைரஸ் பாதித்த பைல் குணப்படுத்தப்பட்டதா? வைரஸ் பாதுகாப்பான இடத்தில் (quarantine) வைக் கப்பட்டதா? என்ற தகவல் உங்களுக்குக் கிடைக்கும். இருக்கிற வேலையில் பறக்கிற நேரத்தில் இந்த ஸ்கேன் செய்வதற்கு மறந்து போகிறது என்று நினைக்கிறவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் வேலையை எளிதாக்கிட ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் வழி தருகின்றன. தானாக ஸ்கேன் (Automatic Scan) பணி நடைபெற செட் செய்திடலாம்.

மேலும் படிக்க……


500 எழுத்துருக்கள் இலவசம்

செப்டம்பர் 26, 2008

வித்தியாசமான வடிவ எழுத்துருக்களை இணையத்தில் தேடிப் பிடிக்கும் வலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் 500 வகையான எழுத்துருக்கள் (ஃபாண்ட்ஸ்) இந்தத்தளத்தில் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன.


எந்த எழுத்துரு உங்களுக்குப் பிடித்துள்ளதோ அதில் சொடுக்கினால் சுருக்கப்பட்ட ஒரு கோப்பு இணையத்திலிருந்து உங்கள் கணினிக்கு தரவிறக்கம் ஆகும். அதை வின்ரார், வின்சிப் போன்ற சுருக்கி-விரிப்பான் மென்பொருள் பயன்படுத்திப் பிரித்தெடுக்கவும்.

பின் அந்த .டிடிஎஃப் கோப்பை உங்கள் ஃபாண்ட்ஸ் ஃபோல்டரில் அமர்த்தவும். அவ்வளவுதான்.

500 ஃபாண்ட்களையும், ஒரே நேரத்தில் இணையிறக்க – ஒரே சொடுக்கில் இணையிறக்க இவர்கள் நம்மிடம் பணம் கேட்கிறார்கள். ஆனால் தனித்தனியாக ஒவ்வொரு விருப்ப எழுத்துருவை தரவிறக்கம் செய்யப் பணம் கேட்கவில்லை. இலவசம்தான்.

http://www.fonts500.com/

நன்றி:தமிழ் 2000