வேர்ட்பிரஸ் – தமிழில் பின்னூட்டத்தினை உள்ளிடுதல்

பின்னூட்டங்களில் தென்படும் பெயர்களுக்குரியவர்கள் பெரும்பாலும் இன்னொரு சக பதிவராகவே இருக்கின்றார். பதிவரல்லாத தனியே வலைப்பதிவு வாசகர்களிடமிருந்து வெளிவரும் மறுமொழிகள் ஒப்பீட்டு அளவில் குறைவானதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். (அல்லது வலைப்பதிவுலகில் எழுதுபவர்களே படிப்பவர்களாயும் படிப்பவர்களே எழுதுபவர்களாயும் இருக்கிறார்கள் என்பது உண்மையகவும் இருக்கலாம்)

வலைப்பதிவொன்றைப் படிக்கும் பதிவரல்லாத வாசகர் ஒருவர் இடுகை குறித்த தன் கருத்தை இலகுவாகச் சொல்லி விட்டுப் போக பின்னூட்டப் பெட்டிகளிலேயே இணைக்கப்பட்டிருக்கும் தமிழில் உள்ளிடும் முறைகள் உதவக் கூடும். அவ்வாறான ஒரு முறையை எனது பின்னூட்டப் பெட்டியிலும் இணைத்துள்ளேன்.

பாமினி தமிங்கிலம் தமிழ் 99 முறைகளில் பயனர் தனது தெரிவினை அழுத்திய பின்னர் நேரடியாக யுனிகோடில் எழுதும் வாய்ப்பினை இது தருகிறது. ஏற்கனவே எனது பழைய புளொக்கரில் பயனில் இருந்த பாமினி தமிங்கில உள்ளிடும் முறைகளோடு தமிழ் 99 உள்ளிடும் முறையையும் சேர்த்திருக்கின்றேன்.

மேலும் தொடருங்கள்

Advertisements

டிவிடியிலிருந்து விரும்பிய பகுதியை வெட்டியெடுக்க……..

வீடியோ சிடி தற்போது வழக்கொழிந்து போய் தற்போது டிவிடிகளின் ஆதிக்கமாக உள்ளது.சிடிக்களில் உள்ள வீடியோக்களில் இருந்து நமக்கு வேண்டிய பகுதிகளினை குறிப்பாக பாடல்களை வெட்டியெடுக்க அதிகளவில் பயன்படுத்தப்படும் மென்பொருள் சிடிகட்டர்(CDCutter)அதேபோல டிவிடிக்களிலிருந்து விரும்பிய பகுதிகளினை வெட்டியெடுக்க பயன்படுத்தப்படும் மென்பொருள் DVDcutter இருப்பினும் DVDknife என்ற மென்பொருள் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.மேற்படி மென்பொருளினை தரவிரக்கி டிவிடியில் உள்ள படங்களில் இருந்து நமக்குத்தேவையான பகுதிகளினை வெட்டி எடுத்து பயன்படுத்தலாம்.முயன்று பார்த்து உங்கள் அனுபவங்களினை உள்ளீடுங்கள்.
மென்பொருளினை இங்கும் தரவிறக்கலாம்.
மேலும்……….

கூகிள் இப்போது உங்கள் தமிழில்

இணையதளம் இன்று நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் உரையாடல்கள், மின் அஞ்சல் பரிமாற்றங்கள், நமது கருத்துக்களைத் தெரிவித்தல் மற்றும் விவரங்களைத் தேடுதல் போன்ற பல காரணங்களுக்காக நம்மில் பலர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறோம்.

உங்களது நெருங்கிய கல்லூரித் தோழர் ஒருவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது எவ்வளவு அற்புதமாக இருக்கும்?

நீங்கள் நன்கு அறிந்துள்ள ஒரு விஷயத்தைப் பற்றிய கருத்தைத் தெரிவிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் ஒரு சிறந்த திரைப்படவிமர்சகராக இருப்பின், இணையத்தளத்தில் உங்கள் விமர்சனங்களை நீங்கள் ஏன் வெளியிடக்கூடாது? உங்களுக்குக் விவரங்கள் ஏதேனும் தேவைபடுகிறதா? அது சமையல் குறிப்புகள், தேர்தல் விவரங்கள் போன்ற எதுவாக இருப்பினும் ஒரு பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் இவ்வனைத்தும் உங்களுக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

மேலும்……