பிளாக் என்றால் என்ன?

பிளாக் என்பது ஒரு வெப்சைட் அல்லது இணையதளமாகும், இதில் உங்களுடைய கருத்துக்களை, எண்ணங்களை மற்றும் விரும்பிய எதையும் வெளிப்படுத்திக்கொள்ள முடியும் .

இதன் மூலம் உங்களுடய எழுதும் திறனையும், கற்பனை வளத்தையும் பெருக்கிக்கொள்ள முடியும். மற்றும் உங்கள் எழுத்துக்களை மற்றவர்கள் படிக்கவும் இது ஒரு நல்ல இடமாக அமையும் . நீங்கள் சிறந்த எழுத்தாளராக இது ஒரு நல்ல வழி என்றுதான் நான் சொல்லுவேன். நிறையபேர் தன்னால் சிறப்பாக எழுத முடிந்து தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுதிக்ககொள்லாமல்  உள்ளனர் அவர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதம்.

சொந்தமாக நீங்கள் ஒரு பிளாக் அல்லது வலைப்பூ தொடங்க நீங்கள் எந்தவிதமான செலவும் செய்யத்தேவையில்லை. இது www.blogger.com, www.wordpress.com போன்ற தளங்களினால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

இதற்க்கு வெப்டிசைன், HTML போன்றவைகள் தெரியவேண்டும் என்று அவசியம் இல்லை.அப்புறம் என்ன நீங்களும் ஒரு வலைப்பூ தொடங்கலாமே

நன்றி:தமிழ் பிளாக் இன்   http://www.tamilblog.in/blogs/what-is-a-blog/

Advertisements

பிளாகர் தளம் தமிழில் வந்துவிட்டது

http://rajasugumaran.blogspot.com/2008/08/blog-post.html

தமிழில் பிளாகர்ஸ் தளம் வந்துவிட்டது. இன்று காலை நான் கூகுல் தளம் பார்த்தபோது Google.co.in offered in: Hindi Bengali Telugu Marathi Tamil என தெரிந்தது, ஏற்கனவே இந்தி, பெங்காலி, தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய 5 மொழிகளை மட்டுமே கூகுல் இந்தியாவில் இந்திய மொழிகள் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று மாலை நான் பார்த்தபோது Google.co.in offered in: Hindi Bengali Telugu Marathi Tamil Gujarati Kannada Malayalam Punjabi என இருந்தது, கூடுதலாக குஜராத்தி, கன்னடம், மலையாளம் பஞ்சாபி ஆகிய நான்கு மொழிகளில் புதிதாக சேவை வழங்கப்பட்டிருந்தது.

பிளாகர்ஸ் ட்ராப்டில் தமிழுக்கான வசதி புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது, தேவையானோர்கள் இந்த தளத்திற்கு செல்ல http://draft.blogger.com/ முகவரிக்கு சென்று உள்ளே செல்ல வேண்டும். . பின்னர் மொழி பகுதியில் தமிழ்மொழியை தேர்வு செய்தால் உங்கள் பிளாக் தளத்தின் கட்டுப்பாட்டு பகுதி முற்றிலும் தமிழாக மாறிவிடும்.

தமிழ் மொழி தேர்வு செய்தால் அதன்பின் வரும் பின்னூட்டங்களின் மின்னஞ்சல்கள் வரும்போது மின்னஞ்சலின் தலைப்பில் எழுத்துறுக்கள் சரியாக வரவில்லை, வரைவு பிளாகர் என்பது சோதனை அடிப்படையில் இப்போது வெளியிடப்பட்டுள்ளதால் முழுமையான சரிசெய்யப்பட்ட அளவில் இது பிளாகர் தளத்தில் வெளியிடப்படும் என்று கருதலாம்.

முயற்சியுங்கள், தமிழை பயன்படுத்துங்கள் தமிழராகிய நீங்கள் தமிழை பயன்படுத்தாமல் ஆங்கிலம் பயன்படுத்தினால் யார் தமிழை பயன்படுத்துவது?

அதனால் இப்போதே தமிழுக்கு மாறுங்கள்,

நன்றி: புதுச்சேரி இரா.சுகுமாரன்

நன்றி: முதவை ஹிதாயத்

விண்டோஸில் ஒரே நொடியில் நீங்கள் தேடும் பைல்களைக் கண்டுபிடித்திட!

இணையத்தில் எதை வேண்டுமானாலும் சில மில்லி-நொடிகளில் தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால், நமது கணினி உள்ள ஒரு கோப்பை தேடிட பல நிமிடங்கள் ஆகிறது. இதில் இருந்து மீள, இந்த மென்பொருள் (DK Finder) உதவுகிறது. இது, நீங்கள் தேடிய கோப்பை மிக மிக விரைவாக (0.1 நொடிகளில்) கண்டுபிடித்து தருகிறது. அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய ஒரு மென்பொருள் இது. 1 mb-க்கும் குறைவான அளவு கொண்ட மென்பொருள் , இத்தனை திறணான வேலை செய்வது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இங்கே சொடுக்கவும்.
(இந்த பக்கதில் “Click here to Download” என்று இருக்கும். அதை கிளிக் செய்யவும்)

மேலும்…..

வலைப் பூ எழுதும் கருவி – Windows Live Writer

தின அடிப்படையில் அல்லது ஒரு நாளிலே பல பதிவுகள் அடிப்படையில் அல்லது கிழமைக்கு ஒன்று என்று பலரும் வலைப் பூக்களில் பதிவுகள் இடுவதைக் காணலாம். அப்படி பதிவுகளை இடும்போது அநேகமானவர்கள் அந்தந்த வலைப் பூச் சேவை வழங்குநர்களின் உள்ளமைந்த சேவையை பயன்படுத்துவதைக் காணலாம். ஆனால் அதில் உள்ள அசெளகரியங்களை மனதில் கொண்டு பதிவுகளைப் பதிவதற்கும் பல்வேறு வலைப் பூக்களை மேலாண்மை செய்வதற்கும் உதவும் வகையில் பல மென்பொருள்கள் உலவுகின்றன. அந்த வகையில் நான் அறிமுகப்படுத்த நினைப்பது,

Windows Live Writer

தரவிறக்கமும் கணினியில் நிறுவுதலும்

மேலும் விபரங்களுக்கு