500 எழுத்துருக்கள் இலவசம்

வித்தியாசமான வடிவ எழுத்துருக்களை இணையத்தில் தேடிப் பிடிக்கும் வலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் 500 வகையான எழுத்துருக்கள் (ஃபாண்ட்ஸ்) இந்தத்தளத்தில் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன.


எந்த எழுத்துரு உங்களுக்குப் பிடித்துள்ளதோ அதில் சொடுக்கினால் சுருக்கப்பட்ட ஒரு கோப்பு இணையத்திலிருந்து உங்கள் கணினிக்கு தரவிறக்கம் ஆகும். அதை வின்ரார், வின்சிப் போன்ற சுருக்கி-விரிப்பான் மென்பொருள் பயன்படுத்திப் பிரித்தெடுக்கவும்.

பின் அந்த .டிடிஎஃப் கோப்பை உங்கள் ஃபாண்ட்ஸ் ஃபோல்டரில் அமர்த்தவும். அவ்வளவுதான்.

500 ஃபாண்ட்களையும், ஒரே நேரத்தில் இணையிறக்க – ஒரே சொடுக்கில் இணையிறக்க இவர்கள் நம்மிடம் பணம் கேட்கிறார்கள். ஆனால் தனித்தனியாக ஒவ்வொரு விருப்ப எழுத்துருவை தரவிறக்கம் செய்யப் பணம் கேட்கவில்லை. இலவசம்தான்.

http://www.fonts500.com/

நன்றி:தமிழ் 2000

Advertisements

இமெயில் உபயோகிப்போருக்கான எச்சரிக்கை

இமெயில் என்பது ரேஷன் கார்டு போல தேவைப்படும் ஓர் வசதியாக உள்ளது. யாரும் இப்போது தபால் அலுவலகத்தை நாடுவதே இல்லை. அவசரத்திற்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் இமெயில் அக்கவுண்ட் கட்டாயம் நமக்குத் தேவயாய் உள்ளது. ஆனால் இதில் பலரும் தவறு இழைக்கின்றனர். திருத்திக் கொள்ள வேண்டிய தவறுகளை இங்கு காண்போம்.

1. முதலாவதாக ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு இன்றைய இணையச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். வர்த்தக ரீதியான இமெயில் தரும் நிறுவனத்தின் இமெயில் அக்கவுண்ட்டை பணம் செலுத்திப் பெற்றுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இதனை உங்கள் வர்த்தகத்திற்குப்பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். உங்கள் அக்கவுண்ட் உள்ள சர்வர் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் உங்களுக்கான இமெயில் சேவை கிடைக்காது.

ஆனால் உங்களின் இமெயில் தெரிந்தவர்கள் அதற்கு மட்டுமே மெயிலை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களை வெவ்வேறு நிறுவன சர்வர்கள் மூலம் வைத்திருந்தால் அவை உங்களுக்கு இது போன்ற சிக்கலான நேரத்தில் உதவும் அல்லவா? பொதுவாக வர்த்தக பயன்பாட்டிற்கு ஒன்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான பரிமாற்றத்திற்கென ஒன்றும் மற்ற இல்ணைய தேடல்களுக்கு ஒன்றுமாக வைத்துக் கொள்வது நல்லது.

2. நீங்கள் வெகு நாட்களாக ஒரு இமெயில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்கள் என்பதற்காக அதனையே வைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் வெகுநாட்கள் பயன்படுத்திய இமெயில் அக்கவுண்ட்கள் ஸ்பாம் மெயில் அனுப்புபவர்கள் வசம் நிச்சயம் சிக்கியிருக்கும். எனவே சில ஆண்டுகள் சென்ற பின்னர் அதனை விடுத்து புதிய அக்கவுண்ட் திறப்பது தான் நல்லது.

3. இமெயில் பயன்பாட்டிலும் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உங்கள் இல்லம் இல்லாமல் வெளியே உங்கள் அலுவலகத்திலோ அல்லது இன்டர்நெட் மையங்களிலோ உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துபவராக இருந்தால் பயன்பாட்டிற்குப் பின் இமெயில் அக்கவுண்ட் தரும் சர்வரில் அக்கவுண்ட்டை முறையாக மூடிவிட வேண்டும். இல்லையேல் அடுத்து அந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் இமெயிலைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மூடுவது மட்டுமின்றி அந்தக் கம்ப்யூட்டரின் கேஷ் மெமரியைக் காலி செய்துவிடுவதும் நல்லது.

தொடர்ந்து வாசிக்க…..

தமிழில் சுலபமாக டைப்செய்வது எப்படி.

Google Indic – கூகிள் இந்தியக், இது ஒரு இந்திய மொழிகளை எழுத பயன்படும் கருவி (tool), இதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளை எளிதாக டைப் செய்யமுடியும். இது முழுக்க முழுக்க யுனிகோட் முறையை உபயோகிப்பதால் டைப் செயப்படும் வார்த்தைகளை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதுமட்டும் இல்லாது ஆங்கில கீபோர்ட் கொண்டே தமிழை சுலபமாகவும் மற்றும் எளிதாகவும் டைப் செய்ய முடிகிறது.

உதாரணமாக, தமிழ் என்று டைப் செய்வதற்கு thamz என்று டைப் செய்தல் போதும். Ctrl + G உபயோகிப்பதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிளை கலந்து எழுத முடியும். இதன் எடிட் ஆப்சன் மூலம் தவறாக டைப் செய்த எழுத்துக்களை சரி செய்துகொள்ளலாம், அதற்கு தவறாக எழுதிய வார்த்தையின்மேல் வைத்து இரு கிளிக்குகள் செய்தால் போதும். தமிழ்பிளாக்.இன் தமிழில் எழுத கூகிள் இந்தியக்கைத்தான் பயன்படுத்துகிறது.

கூகிள் இந்தியக்கில் எழுத: http://www.google.com/transliterate/indic/Tamil

நன்றி:http://www.tamilblog.in/tamil/how-to-write-in-tamil/