சர்வதேசியமாகிறது இன்டர்நெட்- இனி எந்த மொழியிலும் டொமைன்!

சியோல்: இணையதள பயன்பாட்டாளர்களின் ஆன்லைன் முகவரிகளை ஒதுக்கும் பணியைச் செய்து வரும் பெயர்கள் மற்றும் எண்களுக்கான இன்டர்நெட் கழகம் (ஐசிஏஎன்என்), இனி அனைத்து மொழிகளிலும் டொமைன் பெயர்களைப் பெறலாம் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், டொமைன் பெயர்களில், உலகின் எந்த மொழியையும் பயன்படுத்தவும் அது அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்த முடிவு சியோலில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து ஐசிஏஎன்என் தலைவர் ராட் பெக்ஸ்டிரோம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது இன்டர்நெட் பயன்பாட்டாளர்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இது முதல் படி மட்டுமே. ஆனால் இது மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவாகும். இனிமேல் இன்டர்நெட், சர்வதேசியமாகிறது.

ஆசியா, மத்திய கிழக்கு, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் இனிமேல் இன்டர்நெட்டை மிக எளிதாக கையாள முடியும் என்றார்.

நவம்பர் 16ம் தேதி முதல் இந்தத் திட்டம் படிப்படியாக அமலுக்கு வருகிறது.

தொடக்கத்தில், சைனீஸ், கொரியன், அரபி ஆகிய மொழிகளில் அமைந்த சர்வதேச டொமைன் பெயர்களை இந்த அமைப்பு ஒதுக்கும். அதன் பிறகு உலகின் அனைத்து மொழிகளிலும் டொமைன் பெயர்கள் வழங்கப்படும்.

1998ம் ஆண்டு ஐசிஏஎன்என் தொடங்கப்பட்டது. அமெரிக்க அரசின் வர்த்தகத்துறையின் கீழ் இது செயல்பட்டு வருகிறது.

.com போன்ற டொமைன் பெயர்களை இந்த அமைப்புதான் முடிவு செய்கிறது.

கடந்த மாதம், இந்த அமைப்பு அமெரிக்காவுக்கு மட்டும் உரியதாக இல்லாமல், சர்வதேச அளவிலான அமைப்பாக மாற வேண்டும் என்று அமெரிக்க அரசு முடிவு செய்து அதற்கான அனுமதியையும் வழங்கியது.

இதன் மூலம் தற்போது முதல் அதிரடி மாற்றத்தை ஐசிஏஎன்என் அறிவித்துள்ளது.

Thanks: Thats Tamil

Advertisements

Defragmentation செய்ய இலவச மென்பொருள் – Power Defragmenter 3.0

துண்டாக்கல் (Fragmentation) என்றால் என்ன ?
வன்தட்டில் கோப்புகளை சேமிக்கும் போது,கோப்புகள் ஒரே இடத்தில் சேமிக்கபடுவதில்லை.வன்தட்டில் காலியாக உள்ள இடத்தில்,கோப்புகள் துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு சேமிக்கப்படும்.எந்த வகை கோப்புகள் ஆனாலும் ,அதன் அளவு எவ்வளவு பெரிதாயினும் இவ்வாறே சேமிக்கப்படும்.

 

ஏன் Defragmentation செய்ய வேண்டும் ?
வன்தட்டில் சேமித்த கோப்புகளை ,நாம் பயன்படுத்தும்போது ,கணினி ஆங்காங்கே
சேமிக்கபட்ட துண்டுகளை ஒன்றாக்கி கோப்புகளாக தரும். சிறிய கோப்புகளாக இருந்தால் ,கணினியினின் வேகம் குறைவது நமக்கு தெரிவதில்லை.இதுவே சற்று பெரிய கோப்புகளாக இருந்தால் ,அதனை ஒரு முழுமையான கோப்பாக மாற்ற கணினி நீண்ட நேரம் எடுத்து கொள்ளும்.இப்பிரச்சனை நம்மில் பலருக்கு உண்டு.
                                                             மேலும்…….

உங்கள் வீடியோ கோப்பை டிவிடியாக மாற்ற எளிய வழி

நண்பர்களே நீங்கள் வைத்திருக்கும் எந்த ஒரு வீடியோ கோப்பாக இருந்தாலும் அதை டிவிடி கோப்பாக மாற்றுவது எப்படி என்பதை இன்று படிப்படியாக விளக்குகின்றேன்.

அதற்கு இந்த மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்

                                                                                    தொடர்ந்து…….

நம் கணினி வேகமாக இயங்க வேண்டுமா?

ம் கணினி மெதுவாக இயங்குவதற்கு முக்கிய காரணம்.நாம் கணினியில் பதிந்திருக்கும் ஹார்டுவர்கள்,மென்பொருட்களை அப்டேட் செய்யாமல் தொடர்ச்சியாக பயன்படுத்துவது தான்.

அந்த மென்பொருட்கள் அப்டேட் எச்சரிக்கையை கணினியின் திரையில் காட்டினாலும் நாம் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து கணினியை பயன்படுத்துவோம்.

அப்படி பயன்படுத்தும் போது ஒரு முக்கியமான வேலைகளை செய்யும் நேரங்களில் கணினி மக்கர் செய்யும்.

அப்போது தான் நாம் யோசிப்போம்.

அப்படி வந்த பிறகு யோசிப்பதை விட அவ்வப்போது அப்டேட் செய்தால் இந்த பிரச்சனையே தேவையில்லை.

அதற்கு இரண்டு இலவச மென்பொருட்கள் உள்ளன. அதை நம் கணினியில் நிறுவி விட்டு இயக்கினால் எந்தெந்த ஹார்டுவர்கள்,மென்பொருட்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று காட்டி கொடுக்கும் உடனே நாம் அப்டேட் செய்து விட வேண்டியது தான். இதை நாம் அவ்வப்போது செய்யும் போது கணினி இயங்கும் வேகம் சிறப்பாக இருக்கும்.

தொடர்ந்து…..

ஒரு மகன் தனது தந்தைக்காக

இந்த காணொளியை கண்டெடுத்து வழங்கிய சகோதரி ஜஸீலா பானுவுக்கு நன்றி