1GB அளவுள்ள கோப்புக்களை 10MB அளவுள்ள கோப்புக்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருள்.

மிகப்பெரிய அளவிலான கோப்புக்களை மிகச்சிறிய அளவிலான கோப்புக்களாக மாற்றவென ஒரு திறந்த இலவச மென்பொருள்தான் இது. உங்கள் கோப்புக்கள் (Folder) எத்தகைய பெரிய அளவிலான கோப்புக்களாக இருந்தாலும் அதனை மிகச்சிறிய அளவிலான கோப்புக்களாக மாற்ற முடியும்.

KGB Archiver என்னும் மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கோப்புக்களை மிகச்சிறிய அளவிலான கோப்புக்களாக மாற்றிக்கொள்ள முடியும்.

இதற்கு உங்கள் கணனியில் RAM ஆனது குறைந்தது 256MB அளவில் இருக்கவேண்டும்.
Advertisements

Blogger – Read More

நான் பொதுவா மற்றவங்களோட ப்ளாக்ஐ திறக்கும் போது, அதில் இருக்குற பதிவுகளை மட்டும் பார்க்கிறதில்லை.  அந்த வலைப்பூவை எப்படி வடிவமைச்சிருக்காங்கனும் பார்க்கிறதுண்டு.  ஒரு சில ப்ளாக்-ல ஒவ்வொரு பதிவையும் சுருக்கமா போட்டு அதற்கு கீழே Read More… னு ஒரு லிங்க் இருக்கும். இத எப்படி என்னோட வலைப்பூவீலேயும் கொண்டு வர்ரதுன்னு Googleஐ தட்டினா ஏகப்பட்ட பதில்கள்.

ஆனால் அது எல்லாமே நம்ம வலைப்பூவோட Codeஐ மாத்துர மாதிரியே இருந்தது. நமக்கு இதிலெல்லாம் அவ்வளவா அனுபவம் இல்லைனு அப்படியே விட்டுட்டேன்.

ஆனால் எந்த ஒரு Codeஐயும் மாத்தாமல் இதைக் கொண்டு வரலாம்னு ஒரு வழி இருக்கும் போது ஏன் இன்னும் இதை விட்டுவைக்கனும்னு அதையும் கொண்டு வந்தாச்சு.

Read More – வசதியை கொண்டு வருவது ஒன்னும் கம்ப சூத்திரம் இல்லை.

தொடர்ந்து………

கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம்

கோடிக்கணக்கில் குவிந்துள்ள மென்பொருள் உலகின் நாம் தினமும் நிறையமென்பொருள்கள் பற்றி கேள்வி படுகிறோம். நம் தேவைக்கு ஏற்ப நமதுகணினியில் நிறுவியும் கொள்கிறோம். இந்த பிளாக்கில் கூட நான் இலவச மென்பொருள்களை அறிமுகப்படுத்தி வருகிறேன். பெரும்பாலும் அவற்றை உபயோகித்து பார்த்து இருப்பீர்கள்.

அவை அனைத்தும் உங்கள் கணினியில் குறிப்பிட தகுந்த இடம் பிடித்து கொண்டுஇருக்கும். சில மென்பொருள்களை சோதித்து பார்க்கும் வண்ணம் நிறுவி நீக்கமறந்து இருப்போம்.
ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்தால் ஒரே மென்பொருள் குவியலாக இருக்கும். அவை அனைத்தையும் தினசரி உபயோக படுத்துகிறோமா என்றால் கிடையாது. தேவையில்லாத மென்பொருள்கள்தான் அதிகம் இருக்கும்.இவ்வாறு மென்பொருள்களை மேலும் மேலும் கணினியில் அடுக்குவதுகணினியின் செயல்திறனை நிச்சயம் பாதிக்கும். மெதுவாக இயங்கலாம்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் கணினியில் தேங்கியுள்ள தேவையற்ற மென்பொருள்களை நீக்குவது முக்கியம். Control Panel சென்று Add or Remove Programs மூலமாக ஒவ்வொரு மென்பொருளாக கண்டறிந்து நீக்கலாம். அப்படி நீக்கினாலும் தேவையற்ற கோப்புகள் கணினியிலே தங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். அதிக அளவில் மென்பொருள்களை கணினியில் அடுக்கும் போது உங்கள் கணினி திணற ஆரம்பிக்கும்.

எனவே உங்கள் கணினியில் அடிக்கடி உபயோகப்படுத்தும் மென்பொருள்கள் தவிர மற்றவற்றை நீக்கி விடுங்கள்.

தொடர்ந்து………..

இலவச கணிணி பயிலரங்கம்

அமீரகத் தமிழ் மன்றம்

பெருமையுடன் வழங்கும்

கணிணி பயிலரங்கம்

  • உங்களிடம் கண்ணி இருக்கிறதா?
  • கணிணி மூலமாகத் தமிழ் எழுதுவது எப்படி? என்று அறிந்து கொள்ள வேண்டுமா?
  • மின்னஞ்சல், பேச்சரங்கு  போன்றவற்றில் தமிழை எப்படிப் பயன்படுத்துவது என்று அறிந்து கொள்ள ஆசையா?
  • தமிழ் மென் பொருட்களை இலவசமாகப் பெற விருப்ப்மா,
  • உங்கள் எழுத்துத் திறமையை உலகுக்கு எடுத்துச் செல்வது எப்படி, என்று தெரிந்து கொள்ள ஆர்வமா?
  • இவற்றை உங்களுக்கு கற்றுத் தருவதற்காகத்தான் இந்தப்பட்டறை

வாருங்கள் கணிணி உலகில்மிழைப் பரப்பலாம்.

பட்டறையில் கலந்து கொள்ளமுன் பதிவு அவசியம்

—————————————-

தொடர்புக்கு

050 655 0245

050 651  4825

நன்றி மின்னஞ்சல் மூலம்

முதுவை ஹிதாயத்

———————————————————-

Dear Friend,

If you answer ‘YES’ to all the below questions then don’t wait, just register with Ameerga Thamiz Mandram. To register call Mr. Asif Meeran 050 6550245 | Ms. Jazeela Riyas 050 3445375

* Do you know to read and write Tamil but wanted to learn to input Tamil in computers?

* Like to get free Tamil software and related materials?

* Are you interested to take up free computer training?

Date & Time: 20th November, Friday @ 6:00 pm

Venue: We will send you the location map at the time of registration.

It is mandatory to register, as we have very limited seats only.

Even if you are not interested kindly forward the email to your friends whom you think will be benefitted.

anbudan

Jazeela

Ameeraga Thamiz Mandram

McAfee Antivirus மென்பொருள் வழங்கும் ஒரு வருட இலவச லைசன்ஸ்!

மெகாஃபி ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவனம் McAfee VirusScan Plus என்ற ஆண்டி வைரஸ் மென்பொருளை ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படு்த்திக்கு கொள்ளும் லைசன்சுடன் வெளியிட்டுள்ளது!

இம்மென்பொருளில்

 

  • nti-virus
  • Anti-spyware
  • Firewall
  • Web Site Safety Ratings

போன்ற சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளது!

வைரஸ்களிடமிருந்து கணிணியை பாதுக்காக்க crack version anvti viruse மென்பொருட்களை அநேகமானோர் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இது போன்ற பெரும்பாலான crack verion மென்பொருட்கள் மூலமே நமது கணிணியில் வைரஸ்கள் வருகின்றது என்பது அநேகமானோருக்கு தெரிவதில்லை.

எனவே மேற்கண்ட இலவச சலுகையை பயன்படுத்தி ஒரு வருடத்திற்கு இலவசமாக வைரஸ்களிடமிருந்து உங்கள் கணினியை காத்துக் கொள்ளுங்கள்!

சலுகை குறிக காலத்திற்கே வழங்கப்படவுள்ளதாக தெரிகின்றது! எனவே நேயர்கள் முந்திக் கொள்ளுங்கள்!

மேலும் விபரங்களுக்கு….

BSNL ப்ரீபெய்டு இண்டர்நெட் விரைவில்அறிமுகம்

பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு இன்டெர்நெட் விரைவில் அறிமுகம்

சென்னை : ப்ரீபெய்டு செல்போன் சேவையை போன்று ப்ரீபெய்டு இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சேவையை பெற பொருத்துதல் கட்டணம் ரூ.250 எனவும், மோடத்திற்கான விலை ரூ.1000 அல்லது ரூ.1600 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவில்லா தகவல் டவுன்லோடு செய்ய ரூ.300, ரூ.550, ரூ.1200 என 3 மதிப்புகளில் ரீசார்ஜ் செய்யலாம். ரூ.300க்கு ரீசார்ஜ் செய்தால் 7 வாரங்களுக்கு அளவில்லாமல் பயன்படுத்தலாம். டவுன்லோடின் வேகம் 256 கேபி. ரூ.550க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு 256 கேபியும், 15 நாள் என்றால் 512 கேபி, 7 நாள் என்றால் ஒரு எம்பி வேகம் இருக்கும். ரூ.1200 என்றால் 30 நாளுக்கு 512 கேபி, 15 நாளுக்கு ஒரு எம்பி, 7 நாளுக்கு 2எம்பி வேகம் இருக்கும். இவை தவிர குறிப்பிட்ட அளவில் இன்டெர்நெட் பயன்படுத்த டவுன்லோடு கூப்பன்களுமம்விற்பனை செய்யப்பட உள்ளன. இவை ரூ.50 முதல் ரூ.5000 வரை பல மதிப்புகளில் கிடைக்கும். பயன்பாட்டு காலம் 7 நாள் முதல் 210 நாள் வரை. குறிப்பிட்ட காலத்துக்குள் தொகை தீர்ந்து விட்டால் ரூ.100, 200, 500க்கு டாப்அப் செய்து கொள்ளலாம். இந்த சேவையை பெற பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-நன்றி தினமலர்
நன்றி ABDUL RAHMAN
// // // //

// //

 

 

நோக்கியாவின் ஓர் அவசர அழைப்பு

நோக்கியாவின் ஓர் அவசர அழைப்பு

நன்றி கலீல் அஹமது பாக்கவி

லால்பேட்டை எக்ஸ்பிரஸ்