பிளாக்கரில் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க வசதி

பிளாக்கரில் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க வசதி

வலைப்பதிவர்கள் ஒவ்வொருவருக்கும் தனது படைப்பை அதிக வாசகர்களிடம்  கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். வலைப்பதிவிற்கு டிராபிக்கை அதிகரிப்பது தொடர்பாகவும், RSS ஓடை சேவை பற்றியும் ஏற்கனவே பல இடுகைகள் எழுதி இருந்தேன்.

நமது இடுகைகளை வாசகர்களுக்கு பிடிஎப் கோப்பாக வழங்குவது மூலம் நமது எழுத்துக்களை மேலும் சிலரிடம் கொண்டு சேர்க்க முடியும். அதனை உங்கள் வலைப்பதிவில் நிறுவுவது எப்படி? என்பதனை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.

வாசிப்பவருக்கு ஓர் இடுகை பிடித்துப் போனால் அந்த இடுகையை தனது கணினியில் வாசிப்பிற்காக சேமித்து கொள்ள விரும்புவார். இணைய உலாவிகளில் இணையப் பக்கத்தை சேமிக்கும் போது இணைய பக்கம் தனியாகவும், அதில் உள்ள படங்கள் தனியாகவும் சேமிக்கப்படும். இடுகைப் பக்கத்தின் பல பகுதிகள் முழுமையாக சேமிக்கப்படாது. இப்படி சேமிக்கப்பட்ட HTML பக்கங்களை அவர் இணைய இணைப்பு இல்லாத ஒரு நண்பருடன் பகிர்ந்து கொள்ளுவது சற்றே சிக்கலான விஷயம்.

இதற்கு பதிலாக நமது இடுகைப் பக்கத்தை ஒரே கோப்பாக PDF வடிவில் கொடுத்தால் அவருக்கு எளிமையாக இருக்கும். அந்த கோப்பை அவர் மற்றவருடன் பகிர்வதன் மூலம் உங்கள் இடுகை பலரை சென்றடையும். இணைய பரிச்சயம் இல்லாதவர் கூட உங்கள் இடுகைக்கான PDF கோப்பை வாசித்து கொள்ள முடியும்.

இணையப்பக்கங்களை பிடிஎப் கோப்பாக சேமிப்பது பற்றி ஒரு இடுகை எழுதி இருந்தேன். படிக்கவும். அதன் மூலம் எந்த இணையப் பக்கத்தையும் கணினியில் பிடிஎப்பாக சேமித்து கொள்ளலாம். உங்கள் பதிவுக்கு வரும் அனைவரும் இந்த வசதி பற்றி அறிந்து இருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.

மேலும்……

Advertisements

கணிணி – நாமே அசெம்பிள் செய்வது எப்படி – முதல் வகுப்பு

அட எவ்வளவு நாளைக்கு தான் நாம் மற்றவர் கையை எதிபார்ப்பது. மகாத்மா சொன்னது போல முடிந்த அளவு நாமே நாம் வேலைகளை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.

இது கலி யுகம் மட்டும் அல்ல கணிணி யுகம் கூட தான் . முன்பு தொலை காட்சி இல்லாத வீடு வீடு இல்லை தற்போது கணிணி இல்லாத வீடு வீடு இல்லை என்றாகி விட்டது . அப்படி இரண்டற கலந்து விட்ட கணினியை கடை தெருவில் விற்கும் கத்திரிக்காய் மாதிரி கூவி வித்தவுடன் ஓடி போய் வாங்கி விட கூடாது .

ஒவ்வருவருக்கும் ஒரு தேவை இருக்கும் நாம் செய்ய போகும் வேலைகளுக்கு ஏற்ப உள்ள கணினியை தேர்ந்தெடுக்க வேண்டும் . மாணவர்களுக்கு , அலுவலகத்திற்கு , விளையாட்டு பிரியர்களுக்கு , இணையப் பயன் பாட்டுக்கு , கணிணி வல்லுனர்களுக்கு , இசை பிரியர்களுக்கு , பொது தேவைக்கு என பலவாறாக இருந்தாலும் நாம் அசெம்பிள் செய்ய போவது ஒரு பொது பயன் பாடுள்ள கணிணியை தான் .

முதல் வகுப்பு என்பதால் எளிதாக தொடங்க நினைக்கிறேன் , எனவே நாம் கேபினெட் என்பதில் இருந்து தொடங்குவோம் . இந்த கேபினெட் தான் சென்டரல் ப்ரோசெசசிங் யுனிட் என்பதை தன்னகத்தே கொண்டுள்ளது .

இதில் சென்ட்ரல் ப்ரோசெசசிங் என்பது கேபினெட் ,இன்புட் என்பது கீபோர்ட் ,மௌஸ் , ஔட்புட் என்பது மானிடர் ஆகியவற்றை குறிக்கும் . மெமரி என்பது கணினியின் நினைவகத் திறன் . இந்த கேபினெட் உள்ளே தான் SMPS, மதர் போர்டு , ஹார்டிஸ்க் , மெமரி , ரைட்டர் , ப்லோப்பி டிரைவ்,cooler fan என அனைத்தும் இணைக்கப் பட்டு இருக்கும் . சரி கேபினெட் அப்பிடினா என்னானு பார்த்தோம் அது எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க படம் கிழேகேபினெட் வாங்கும் பொது சைடு பகுதியில் , மற்றும் பின் பகுதியில் பேன் வைக்கும் ஆப்ஸன் உள்ளதாக வாங்க வேண்டும் . ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இந்த கேபினெட் மட்டும் சரி இல்லை என்றால் பேஸ்மென்ட் சரி இல்லாத வீடு மாதிரி தான் .

கேபினெட் விலை 900 rs – 2500 rs (சென்னை விலை)

நாம் அசெம்பிள் செய்ய வாங்க போகும் கேபினெட் zebronics விலை 1000 rs .

அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது கேபினெட் உடன் வரும் SMPS பற்றி.

மேலும்…….

மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி

மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பது பற்றியும், ஒபேரா மொபைல் உலாவி பற்றியும் ஏற்கனவே இடுகைகள் எழுதி இருந்தேன். மொபைல் போன்களில் உபயோகிக்க சிறந்த மற்றொரு இணைய உலாவியை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.

பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.

ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.

ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.

மேலும்…..

மொபைல் வீடியோவை இணையத்தில் நேரடி ஒளிபரப்ப

சுற்றுலா, பிறந்தநாள், விழாக்கள் போன்றவற்றிற்கு செல்லும்போது அந்த நிகழ்ச்சியை மொபைலில் பதிவு செய்து உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து வந்திருப்போம். மிக வேகமான பகிர்தலுக்கு இணையம் நல்ல ஊடகமாகவே நமக்கு பயன்பட்டு இருக்கிறது.

மொபைலில் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை உடனுக்குடன் இணையத்தில் ஏற்றுவது பற்றி ஏற்கனவே இடுகைகள் எழுதி இருந்தேன். மொபைலில் எடுக்கும் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புவது எப்படி? என்று இப்போது பார்ப்போம்.

இது ஒன்றும் கடினமான வேலை கிடையாது. இதற்கு தேவை கேமரா வசதி உள்ள மொபைல் உள்ள போன், மொபைலில் நல்ல வேகமான (3G or Wifi) இணைய இணைப்பு. இதனை சிறப்பாக செய்வதற்கு இணையத்தில் Qik எனும் இணையதளம் சிறப்பான சேவை வழங்குகிறது.

Qik.com சென்று பயனர் கணக்கு உருவாக்கி கொள்ளுங்கள். நீங்கள் பேஸ்புக், டிவிட்டர் பயனராக இருந்தால் அதனை உபயோகித்து Qik -ல் பயனராகி கொள்ள முடியும். அடுத்து அவர்கள் வழங்கும் சிறிய மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ள வேண்டும். எந்தெந்த மொபைல் மாடல்கள் சப்போர்ட் செய்யபடுகிறது என்பதனை இந்த சுட்டியில் காணவும். உங்கள் மொபைல் அந்த பட்டியலில் இருந்தால் மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

இந்த மென்பொருளை உபயோகித்து நீங்கள் எடுக்கும் மொபைல் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புங்கள். வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு Qik இணையதளத்தில் ஒளிபரப்பப்படும், சேமிக்கப்படும். உங்கள் ஒளிபரப்பு அனைவரும் பார்க்கும்வண்ணம் பப்ளிக் ஆக அமைந்து இருக்கும். அதனை நீங்கள் அனுமதிப்பவர்கள் மட்டும் பார்க்கும்படி பிரைவேட் ஆக அமைத்து கொள்ளும் வசதியும் உண்டு.

Qik -ல் சேமிக்கப்படும் உங்கள் வீடியோக்களை நீங்கள் பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் போன்ற சமூக தளங்களில் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் பிளாக்குகளில் Embed செய்தும் கொள்ளலாம். Qik பயனர்களின் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களையும், சேமிக்க பட்டவற்றையும் இந்த சுட்டியில் காணுங்கள். மொபைல் உபயோகிப்பாளர்கள் இடையே இந்த இணைய சேவை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும்….

கூகிள் வாய்ஸ் விரிவான அறிமுகம்

கூகிள் வாய்ஸ் விரிவான அறிமுகம்

மிகவும் உபயோகமான பல்வேறு சேவைகளை இணையத்தில் வழங்கி வரும் கூகுளின் மற்றுமொரு சேவைதான் கூகிள் வாய்ஸ் (Google Voice).அது குறித்து ஓரளவுக்கு அறிமுகம் கொடுக்கும் வண்ணமே இந்த இடுகை.  உங்களிடம் உள்ள தொலைபேசிகளை ஒருங்கிணைத்து பல சிறந்த வசதிகளை இந்த சேவை வழங்குகிறது.

ஒப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ஜிமெயில் போன்றதொரு சேவைதான். மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியை குரல் வழி அனுப்ப முடியும். உங்களிடம் உள்ள பல தொலை பேசிகளுக்கு ஒரே எண்ணை கூகிள் வாய்ஸ் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த சேவையில் உண்டு.

செய்திகளை உங்கள் குரல்வழி பதிவு செய்து மெயிலாக அனுப்பலாம். அனுப்பபடுகிற வாய்ஸ் மெயில்களை கேட்கலாம். தரவிறக்கலாம். வாய்ஸ் மெயில்கள் எழுத்துகளாக transcript செய்யப்பட்டு அவற்றை மெயில் போன்று வாசித்து கொள்ளவும் முடியும். இவை உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ்சாக வந்து சேரும்படியும் அமைத்து கொள்ளலாம்.

இதனை உபயோகிக்கும் போது உங்களுக்கென்று தனியே போன் நம்பர் போன்று கூகிள் வாய்ஸ் எண் பெற்று கொள்ள முடியும். இதனை உங்கள் தொலைபேசி, மொபைல் போன்களுடன் தொடர்பு படுத்தி கொள்ள முடியும்.உதாரணத்திற்கு உங்களை தொடர்பு கொள்வதற்கு வீட்டு தொலைபேசி, அலுவலக தொலைபேசி, மொபைல் என்று மூன்று எண்கள் இருப்பதாக கொள்வோம். இந்த மூன்று எண்ணையும் உங்கள் கூகிள் எண்ணுடன் தொடர்புபடுத்தி கொள்ள முடியும்.

உங்களை அழைப்பவர் உங்கள் கூகிள் எண்ணுக்கு அழைக்கும் போது உங்களுக்கு உள்ள மூன்று போன்களிலும் ரிங் அடிக்கும். அல்லது உங்கள் கூகிள் எண்ணில் தொடர்பு கொண்டால்  காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை உங்கள் அலுவலக போனில் அழைப்பு (Ring) வரும்படியும், மற்ற நேரங்கள் உங்கள் வீட்டு போனில் தொடர்பு (Ring) கொள்ளும்படியும் உங்கள் கூகிள் எண்ணில் செட்டப் செய்து கொள்ளலாம்.

உங்கள் நண்பர்கள் அழைக்கும் போது மட்டும் மொபைல் எண்ணில் அழைப்பு வரும்படி அமைத்து கொள்ளலாம். வேண்டாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை நிரந்தரமாக தடை செய்துகொள்ளும் வசதியும் உண்டு. உங்கள் மூன்று போன்களில் எந்த போன் வழியாகவும் கூகிள் வாய்ஸ் மூலம் மற்றவர்களை அழைத்து கொள்ள முடியும்.

நாம் எப்போதும் ஒரே தொலைபேசி எண்ணை வைத்திருப்போம் என்று உறுதியாக கூற முடியாது. தொலைபேசி நிறுவனங்கள் சலுகையுடன் சிறப்பான சேவை வழங்கும் போது அடிக்கடி எண்ணை மாற்றி மற்றொரு சேவைக்கு மாறி கொண்டிருப்போம். இதனால் நமக்கு நிரந்தர தொடர்பு எண் என்பது இயலாத விஷயம். இதற்கும் ஒரு தீர்வு கூகிள் வாய்ஸ் எண்.

மேலும்……

புதிய கணிணி வாங்குபவர்களின் கவனத்திற்கு

நண்பர்களே அனைவருக்கும் இலவசமாகவும் சட்டரீதியாகவும் கணிணிக்கு அதிமுக்கிய தேவையான நல்ல மென்பொருட்கள் கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.  அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். புதிய கணிணி வாங்குபவர்கள் இந்த மென்பொருள் இருந்தால் போதும் உங்கள் கணிணியில் நிறைய மென்பொருட்கள் தேட வேண்டிய வேலைகள் மிச்சமாகும்.

நெருப்பு நரி வலைஉலாவி மென்பொருள்

இந்த மென்பொருள் மூலம் இணையத்தளங்களை வேகமாக பார்க்க உதவுகிறது.  இந்த மென்பொருள் Open Source என்பதால் அடிக்கடி மேம்படுத்தப்படுகிறது.  அது இல்லாமல் நிறைய நீட்சிகளை தரவிறக்கி பயன்படுத்த முடிவதால் மிகவும் எளிதாகிறது வேலைகள்.  இதன் புதிய பதிப்பு 3.5. வெளியிடப்பட்டுள்ளது.
மென்பொருள் தரவிறக்க சுட்டி
நீட்சி தரவிறக்க சுட்டி

வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்

இது மிகவும் முக்கியமானது ஏனென்றால் அநேகம் பேர் புதிய கணிணி வாங்கியவுடன் இணைய இணைப்பு பெற்று விடுகின்றனர்.  அதன் வழியாக நிறைய மென்பொருள், படங்கள் ஆகியவை தரவிறக்கும் போது வைரஸ் வந்து புதிய கணிணியை பாழ் செய்ய நேரிடுகிறது.  அதை தடுக்க இந்த மென்பொருளை நிறுவிய பிறகு இணையத்தில் உலாவலாம்.  மென்பொருள் சுட்டி

டிபிராக் மென்பொருள்

கணிணி வாங்கி மாதம் ஒருமுறை இரு மாதத்திற்கு ஒரு முறை டிபிராக் செய்வது நல்லது இதன் மூலம் கணிணியின் வன்தட்டில் இடம் மாறி அமர்ந்திருக்கும் கோப்புகள் ஒரு ஒழுங்கு வரிசையாக அமர்ந்து நாம் கையாள்வதற்கு சுலபமாக இருக்குமாறு மாற்றியமைக்கப்படுகிறது.   மென்பொருள் சுட்டி

சிசிகீளினர் மென்பொருள்

இந்த மென்பொருள் இணையத்தில் உலாவிய பிறகு உள்ள தற்காலிக கோப்புகளை நீக்கலாம்.  தேவையில்லாத மென்பொருட்களை நீக்க முடியும்.  மென்பொருள் சுட்டி

தொடர்ந்து…….

அன்றிலிருந்து இன்று வரை உள்ள மென்பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தரவிரக்க

நம் கம்யூட்டரில் இன்றியமையாத சில மென்பொருள்கள்
தேவை. அப்படிபட்ட மென்பொருள்களை தரவிரக்கும் போது
கூடவே வைரஸும் வருகிறது.இதை தவிர்க்க அந்தந்த
மென்பொருள் நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து
தரவிரக்கலாம்.இப்படி ஒவ்வொரு மென்பொருளும் ஒவ்வொரு
இணையத்திலிருந்து தரவிரக்குவதற்கு பதிலாக அத்தனையும்
ஒரே இணையதளத்திலிருந்து தரவிரக்கலாம்

இணையதள முகவரி http://www.filehippo.com
எந்த வைரஸும் இல்லாமல் அதுமட்டுமின்றி நீங்கள் தரவிரக்கும்
மென்பொருளின் முதலில் வெளியான தொகுப்பிலிருந்து இன்று
வரை வெளியாகியுள்ள அனைத்தையும் பார்க்க மட்டும் இல்லாமல்
தரவிரக்கியும்கொள்ளலாம். அது மட்டுமா ஒவ்வொரு தொகுப்பிற்கும்
அதைப்பற்றிய முழுமையான  செய்திகளுடன் என்ன மாறுதல்
செய்துள்ளனர் என்பதையும் தெரிவிக்கிறது.
நமக்கு மென்பொருள் பெயர் தெரியவில்லை என்றாலும் அவர்களே
தனித்தனியாக பகுதிவாரியாக பிரித்து வைத்துள்ளனர்.

பாட்டு கேட்பதற்கு உள்ள மென்பொருள் வகையை தேர்ந்தெடுத்தால்
அதிலுள்ள டாப் மென்பொருள்கள் தெரியவரும் உடனடியாக
தரவிரக்கிகொள்ளலாம்.

இதை எல்லாம் விட சிறப்பு எந்த தரவிரக்கப் போகும் மென்பொருளின்
(Screenshot) ஸ்கீரின்சாட்டும் பார்த்துக்கொள்ளலாம்.
அனைத்து கம்யூட்டரின் ஆடியோ வீடியோ டிரைவர் மென்பொருளும்
தரவிரக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த நீர்யானையின்
பெருமையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு பதிவு போதாது.

தொடர்ந்து…..