உங்களின் பிளாக்குகளை அழகாக்குவது எப்படி ?!

தற்போதைய நிலையில் பிளாக்குகள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கதை, கவிதை, கட்டுரைகள், சினிமா என தனது சொந்த கருத்துக்களை இடும் பயனாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் வளர்ந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறது.

பிளாக் எழுத என்று வருபவர்கள் தொழில்நுடபம் சார்ந்தவர்கள் என்று அல்லாமல் எழுத்துப் பணியில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் எழுத்துத் திறமையை பிளாக்கில் எழுதி காட்டுகிறார்கள். இவர்களால் எழுதப்படும் கட்டுரைகள், கருத்துக்கள் வியக்கத் தகும் வகையிலும், அரிய கருத்துக்களையும் தாங்கி வந்தாலும் அவர்களின் தொழில்நுட்ப அறியாமையினால் அவர்களது வலைப்பக்கங்கள் மிகச் சாதாரணமாகவும், சரியாக பண்படுத்ததல் இல்லாமலும் காணப்படுகின்றது.

இந்த கட்டுரை எளிய வகையில் தமது பிளாக்குகளை எவ்வாறு அழகாக்கலாம் என்பதை விவரிக்க உள்ளது. பிளாக்குகளை அழகாக்க தேவைப்படுபவைகளை, செயல்முறைகளையும் இங்கே காண்போம்.

1. டெம்ப்ளேட் என்னும் அடைப்பலகைகள்.

ஒவ்வொரு பிளாக்கிற்கும் உள்ள அழகே அதன் டெம்ப்ளேட்டுக்கள் தான். டெம்ப்ளேட்டுக்கள் தான் ஒருவரது பிளாக்கின் முதல் தோற்றத்தை தீர்மானிக்கிறது. அத்துடன் இடப்பட்டுள்ள கட்டுரைகளையும், சுட்டிகளையும் மிக அழகாக அடுக்கி வைப்பதற்கு டெம்ப்ளேட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பிளாக்கர் நிறுவனம் பிளாக் உருவாக்கும் ஒவ்வொருக்கும் என தனது தளத்தில் சில டெம்ப்ளேட்டுகளை அளிக்கிறது. இவை முறையே Minima, Denim, Rounder, Herbert, Harbor, Scribe, Dots, thisaway என்பன உள்ளன. பிளாக் உருவாக்கும் ஒவ்வொருவரும் இவற்றில் எதாவது ஒன்றை தேர்வு செய்து விட்டு எழுத ஆரம்பிக்கின்றனர். ஆனால் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு அழகான டெம்ப்ளேட்டை மாற்றிக் கொள்ளலாம் என்பதை பெரும்பாலோனோர் அறிந்திருப்பதில்லை. அவற்றை எங்கே காண்பது? எவ்வாறு மாற்றுவது என்பதை அறியலாம்.

இணையங்களில் கிடைக்கும் இலவச பிளாக்கர் டெம்ப்ளேட்டுக்களை தேட கூகிள் தளத்திற்குச் சென்று “Free Blogger Template downlod” எனத் தேடினால் எண்ணற்ற தளங்களின் முகவரிகள் கிடைக்கும்.

மேலும்

Advertisements

பதிவர்களின் கவனத்திற்கு!

பதிவு எழுதுபவர்களில் 50% பேர் கணினி அறிவு சிறிது குறைவாகவே உள்ளது. புதியவர்கள் தங்களுடைய பிளாக்கினை அழகு படுத்த பல GADGET, TEMPLATE ஆகியவைகளை மாற்ற நினைப்பார்கள். அவர்களுக்காக தான் இந்த பதிவு இதில் பிளாக்கருக்கு தேவையான அடிப்படை தேவைகளை எப்படி சரி செய்வது என்று நாம் காண போகிறோம். 1. உங்கள்  பிளாக்கரை டவுன்லோட் செய்ய : நம்முடைய பிளாக்கரில் நாம் கஷ்ட்டப்பட்டு எழுதும் பதிவுகள்  திடீரென இல்லை என்றால் எப்படி இருக்கும். இது நடப்பதற்கு வாய்ப்புகள் பல உண்டு அதனை தவிர்க்க நாம் நம்முடைய பிளாக்கரை டவுன்லோட் எடுத்து வைப்பது மிகவும் சிறந்தது. நம்முடைய பிளாக்கரை டவுன்லோட் செய்ய Dassboard- layout- Edit html – Download Full Template- சென்று செய்து கொள்ளவும். தேவைபட்டால் படத்தை பார்த்து கொள்ளுங்கள்

2. டெம்ப்ளேட்டை மாற்ற( TEMPLATE CHANGE) :

நம்முடைய பிளாக்கரில் Default ஆக வரும் template பார்ப்பதற்கு சிறிது வசதி குறைவாகவே இருக்கும். நாம் அதை எப்படி மாற்றுவது என்று இங்கு காணலாம்.

முதலில் உங்களுக்கு தேவையான template இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.  டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும் . டவுன்லோட் செய்தவுடன் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD – LAYOUT – EDIT HTML – என்ற பகுதிக்கு செல்லவும். சென்றவுடன் உங்களுக்கு கீழ்காணும் விண்டோ போல வரும்.

மேலே உள்ள விண்டோ போல வந்ததும் Choose File என்பதை கிளிக் செய்து உங்கள் பைலை தேர்ந்தெடுக்கவும். பின்பு அதற்கு அருகில் உள்ள upload என்ற பட்டனை அழுத்தவும். அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல  Warning message  வரும் அதில் keep widget என்பதை க்ளிக் செய்து விடவும். கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.

அவ்வளவு தான் உங்கள் பிளாக்கின் template மாற்ற பட்டிருக்கும்
3. Word Verification
இது நம்முடைய பார்வையாளர்கள் நம்முடைய பதிவை பார்த்து விட்டு அந்த பதிவை பற்றி அவர்களின் கருத்துக்களை பின்னூட்டங்களின் வழியாக நமக்கு தெரிவிப்பார்கள். அப்படி தெரிவிக்கும் போது நம்முடைய பிளாக்கரில் தேவையில்லாமல் அந்த எழுத்துக்கள் வந்து எரிச்சலை தரும் இது நம் வாசகர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும். ஆகையால் அதை எப்படி நம்முடைய பிளாக்கரில் நீக்குவது என்று பாப்போம்.
படத்தில் காட்டியுள்ளது போல் நீங்கள் செய்தால் உங்களுடைய பிளாக்கரில் WORD VERIFICATION நீங்கி விடும்.
————————————————
இன்னும் இது போன்ற பயனுள்ள வலைப்பதிவுத் தகவல்களுக்கு கீழ் உள்ள தொடுப்பை கிளிக்கவும்

வாருங்கள்: உரையாடுங்கள் ;அழைக்கும் இணையதளம்

வந்தால் மட்டும் போதுமா? மெரும்பாலான இணையதள உரிமையாளர்கள் மனதில் உள்ள கேள்வி தான் இது. பல பெரிய இணைய நிறுவனங்கள் இந்த கேள்விக்கு பதில் காண முயன்று வருகின்றன.சிறிய‌ த‌ள‌ங்க‌ள் இப்போது தான் இந்த‌ கேள்வியின் முக்கிய‌த்துவ‌த்தை உண‌ர‌த்துவ‌ங்கியுள்ள‌ன‌.
அதாவ‌து இணைய‌வாசிக‌ள் இணைய‌த‌ள‌த்திற்கு விஜ‌ய‌ம் செய்தால் மாடும் போதுமா? ஒரு விருந்தாளியைப்போல‌ அவ‌ர்க‌ள் கொஞ்ச‌ நேர‌ம் தங்கியிருந்து ம‌ன் நிறைவோடு செல்ல‌ வேண்டும் என்று செய்தி த‌ள‌ங்க‌ள் போன்ற‌வை எதிர்பார்க்கின்ற‌ன‌.அது மட்டும் அல்லாம‌ல் அந்த‌ நிறைவு த‌ரும் உண‌ர்வில் அவ‌ர்க‌ள் மீண்டும் வ‌ருகை த‌ர‌ வேண்டும் என்று எதிர‌பார்க்கின்ற‌ன.

மாறாக‌ வ‌ழிப்போக்க‌ர்க‌ளை போல‌ இணைய‌வாசிக‌ளும் வ‌ந்தோம் சென்றோம் என‌ பிடிப்பில்லாம‌ல் இருந்தால் இணைய‌ விசுவாசிக‌ளை உருவாக்க‌ முடியாது அல்ல‌வா?

எந்த‌ ஒரு இணைய‌த‌ள‌மும் ப‌த்தோடு ப‌தினென்னு என்று இல்லாம‌ல் த‌ன‌க்கான‌ த‌னித்துவ‌த்தை பெற‌ இந்த‌ விசுவாச‌ம் அவ‌சிய‌ம்.

இணைய‌ வியாபார‌த்தில் ஈடுப‌ட்டிருக்கும் இ காமர்ஸ் த‌ள‌ங்க‌ளைப்பொருத்த‌ வ‌ரை இந்த‌ கேள்வி வேறு வ‌கையான‌ முக்கிய‌த்துவ‌த்தை பெறுகிற‌து. இணைய‌வாசிக‌ள் வ‌ந்தார்க‌ள் சென்றார்க‌ள் என்று இருந்தால் போதுமா? வ‌ந்த‌வ‌ர்க‌ள் பொருட்க‌ளை வாங்க‌ வேண்டாமா? மீண்டும் வாங்க‌ வ‌ர‌ வேண்டாமா?

மேலும்……

வலை உலவிகளை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்

உங்கள் கணிப்பொறியில் மீண்டும் விண்டோஸோ அல்லது லினக்சோ நிறுவவேண்டி வரும் போது வலை உலவிகளும் ( Internet Browsers ) சேர்ந்தே அழிந்து விடும். அதில் உள்ள உங்களுக்கு பிடித்த தளங்கள், புக்மார்குகள், அமைப்புகளும் காணாமல் போய்விடும். இந்த நிலையில் உங்களின் வலை உலவியை மொத்தமாக பேக்கப் எடுக்க எளிய மென்பொருள் ஒன்று உதவுகிறது.


இதில் பேக்கப் எடுத்து வைத்து விட்டால் உங்கள் வலை உலவியின் அமைப்புகளை மீண்டும் நிறுவாமலே எளிதாக பெற்று விடலாம். இது தற்போது உள்ள அனைத்து வலை உலாவிகளையும் ஆதரிக்கிறது. இந்த மென்பொருளின் பெயர் FavBackup. இந்த மென்பொருள் ஆதரிக்கும் வலை உலவிகள் :

Firefox
Internet Explorer
Safari
Google Chrome
Opera
Flock

மேலும்……..