இணைய உலகத்தில் கிடைக்கும் அனைத்துவீடியோக்களையும் சேமிக்கலாம்

இணையத்தில் ஆங்கில மொழி அறிவை வளர்க்கும் வீடியோவில்
இருந்து பல தரப்பட்ட பயன்தரும் வீடியோக்கள் இணையதளத்தில்
கிடைக்கின்றன அவ்வாறு இணையதளங்களில் கிடைக்கும்
வீடியோவை எப்படி சேமிக்கலாம் என்பதைப்பற்றிதான் இந்த பதிவு.

படம் 1

முக்கியமான வீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோவை
எந்த மென்பொருளும் இல்லாமல் உடனடியாக தரவிக்கி நம்
கணினியில் சேமிக்கலாம் இன்று பிரபலமாக இருக்கும் யூடியுப்,
மெட்டாகேபே,டெய்லிமோஸன்,வேகொ,பிளிக்கர் மற்றும் கூகுள்
வீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோ பக்கத்தின் யூஆரெல்
முகவரியை மட்டும் கொடுத்து நாம் நம் கணினியில் சேமித்து
வைத்துக்கொள்ள புதிதாக ஒரு இணையதளம் வந்துள்ளது.

இணையதள முகவரி :  http://savevideo.me

மேலும்……

Advertisements

உங்களது வலைப்பூவை வேகமாகவும் அழகாகவும் ஆக்குவது எப்படி?

வலைப்பூவை வேகமாகவும்,அழகாகவும் ஆக்க அனைத்து பதிவர்களுக்கும் ஆசை உண்டு. ஆனால் அதனை எப்படி செய்வது என்று பல நபர்களுக்கு தெரியவில்லை.அதற்காகத்தான் இந்த பதிவை எழுதுகிறேன்.முதலில் பதிவர்கள் வாசகர்களை கவர ஒரு நல்ல பலகையை எடுக்க வேண்டும்.அந்த பலகை பார்க்க எளிமையாக இருக்க வேண்டும்.அவ்வாறு எடுக்க இங்கு செல்லுங்கள் அல்லது கீழே உள்ள தளங்களுக்குச்  செல்லுங்கள்:-
http://btemplates.com/

சரி நண்பா இத்தனை பலகை இருக்கிறதே அதில் எப்படி இந்த பலகை சிறந்த  பலகை என்று கண்டுபிடிப்பது  என்று குழப்பமாக இருக்கிறதா:)அதற்கு பதில் கீழே உள்ளது:-

பொதுவாக ப்ளாகர் பலகைகள் மேலே  உள்ள  வடிவங்களின் அடிப்படையில் தான் இருக்கும். இந்த வடிவங்களில் எது சிறந்த வடிவம் என்பதை தனியே நான் கட்டமிட்டு காட்டி உள்ளேன்.சரி இவ்வளவு வடிவங்கள் இருந்தும் ஏன் இவன் இந்த வடிவங்களை காட்டுகிறான் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்.அதற்கான பதில்:- எப்பவுமே துணைப்பட்டை (sidebar) வலது பக்கம் இருந்தால் முதலில் நம்  பதிவு சீக்கிரமாக லோட் (load) ஆகும்.ஏன் என்றால் வாசகர்களுக்கு அதுதான் முக்கியம்.இதுவே அந்த துணைப்பட்டை  இடது பக்கத்தில் இருந்தால் முதலில் சைடுபாரில் இருக்கும் நிரல் பலகைகள் லோட் ஆகும் அதற்கு  பிறகு தான் நம் பதிவு லோட் ஆகும்.வாசகர்களுக்கு அது முக்கியம் இல்லை.இப்பொழுது பலகையின் கீழ் (footer) பகுதியை எப்படி தேர்ந்தெடுப்பது என்று பார்ப்போம்.பொதுவாக பலகையின்  கீழ் பகுதி கீழே உள்ளதைப் போன்று காணப்படும்.

மேலும்……….

பிடிஎஃப் கோப்புகளை விடுவிப்ப‌து எப்ப‌டி

பிடிஎஃப் பிரிய‌ர்க‌ள் என்று யாராவ‌து இருக்கின்ற‌னரா? அதே போல் பிடிஎஃப் வெறுப்பாள‌ர்கள் இருக்கின்ற‌னரா?

என்னைப்பொருத்த‌வ‌ரை சில‌ நேர‌ங்க‌ளில் நான் பிடிஎஃப் ஆத‌ர‌வாள‌ர்.சில‌ நேர‌ங்க‌ளில் பிடிஎஃப் விரோதி.

பிடிஎஃப் என்ப‌து ஒரு கோப்பு வ‌டிவ‌ம்.ஆவ‌ன‌ங்க‌ளை ப‌ரிமாரிக்கொள்ள‌ அடோப் நிறுவ‌ன‌த்தால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து.துவ‌க்க‌த்தில் பிடிஎஃப் கோப்புக‌ளை உருவாக்குவ‌தும் அவ‌ற்றை வாசிப்ப‌தும் க‌டின‌மாக‌ இருந்த‌து. இத‌ற்கு அடோப் மென்பொருள் தேவை.இத‌னால் இண்டெர்நெட்டில் பிடிஎஃப் கோப்புக‌ளை அனுப்புவ‌தும் பெறுவ‌தும் சிக்க‌லான‌தாக‌ இருந்த‌து.

ஆனால் பிற‌கு அடோப் இற‌ங்கி வ‌ந்து பிடிஎஃப் கோப்புக‌ளை வாசிப்ப‌த‌ற்கான‌ ரீட‌ர் மென்பொருள் கிடைப்ப‌தை சுல‌ப‌மாக்கிய‌து.க‌ட‌ந்த‌ ஆண்டு இது ஒப‌ன் சோர்ஸ் முறைக்கு கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌து.

இதெல்லாம் தொழில்நுட்ப‌ விவ‌ர‌ங்க‌ள்.விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் பிடிஎஃப் கோப்புக‌ள் குறிப்பிட்ட‌ இட‌ங்க‌ளில் மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.உதார‌ண‌த்திற்கு த‌மிழில் ஒரு செய்தியை அனுப்பும் போது பிடிஎஃப் கோப்பாக‌ மாற்றும் ப‌ட்ச‌த்தில் எழுத்துரு பிர‌ச்ச்னை எழாது.அதனை அப்ப‌டியே திற‌ந்து வாசிக்க‌லாம்.

இதே போல‌ செய்தி ம‌ட‌ல் போன்ற‌வ‌ற்றை அனுப்ப‌ இந்த‌ வ‌டிவ‌மே ஏற்ற‌து.வாழ்த்து அட்டை ம‌ற்றும் அழைப்பித‌ழ்களுக்கும் இது பொருந்தும்.இந்த‌ கார‌ண‌ங்க‌ளினால்……..

மேலும் வாசிக்க…..