உங்கள் கணினியின் லைசன்ஸ் மறந்து விட்டால்

கணினியில் முக்கியமான ஒன்று இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் இயங்கு தளங்கள். பெரும்பாலும் அனைவரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் விண்டோஸ் இயங்கு தளத்தையே பயன் படுத்துகிறோம் . நாம் இந்த கணினியில் இந்த இயங்கு தளங்களை நிறுவும் போது அதற்க்கான லைசன்ஸ் மற்றும் சீரியல் எண்ணை சரியாக கொடுத்தால் மட்டுமே இந்த இயங்கு தளத்தை நம் கணினியில் நிறுவ முடியும். ஒரு எண் மாறினால் கூட நிறுவ முடியாது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த எண்ணை நாம் தொலைத்தோ அல்லது மறந்தோ விடுகிறோம் அல்லது மறந்து விடுகின்றோம் என வைத்து கொள்வோம்.

இப்பொழுது நம் கணினியில் ஏதோ ஒரு பிரச்சினையால் இயங்கு தளத்தை திரும்பவும் நிறுவ வேண்டும். இப்பொழுது அந்த எண்ணை மறந்து விட்டதால் நம் கணினியில் நிறுவுவதில் பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையில் நமக்கு உதவவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பயன்கள்:

  • இந்த மென்பொருளில் உங்கள் இயங்கு தளங்கள் மட்டுமின்றி நம் கணினியில் பதிந்துள்ள Nero, VM ware, Ms office ன் Serial எண்ணையும் நமக்கு தெரிவிக்கும்.
  • இந்த மென்பொருளை நம் கணியில் நிறுவ வேண்டாம். தரவிறக்கியவுடன் நேராக இயக்கலாம்.
  • மிகச்சிறிய அளவே உடையது (95kb).
  • 100% பாதுகாப்பான இலவச மென்பொருள்.
  • மேலும்………….

மாதம் 95 ரூபாயில் Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு

பிராட்பேண்ட்டிற்கு குறைந்தபட்சம் 750 ரூபாய் தேவைப்படும். இணைய வேகம் 256 Kbps. கைபேசியில் இணைய வேகம் சராசரியாக 112 Kbps. ஆனாலும் எல்லா கைபேசியிலும் இது வேலைக்கு ஆகாது.


MODEM உள்ள போன்கள் விபரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

தேவையானவை

1) மோடம் உள்ள போன் (உதாரணமாக Nokia N72)

2) போனையும் கணிணியையும் இணைக்கும் USB கேபிள். (உதாரணமாக Ca-53) (USB கேபிள் உங்கள் போன் மாடலை சொல்லி நோக்கியா டீலர் அல்லது பஜார்களில் கேட்டால் கி்டைக்கும்)

3) நோக்கியா பிசி சூட் அல்லது போனையும் கணிணியையும் இணைக்கும் கேபிளுடன் கொடுக்கப்படும் Cd (Nokia PC Suite or Phone Connection Cd Setup)

NOKIA PC SUITE  தரவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

4) உங்கள் கைபேசியின் சேவை வழங்குநரிடம் (ஏர்டெல், டாடா டோகோமோ, ஏர்செல்) இருந்து GPRS இணைப்பு. (டாடா டோகோமோவில் தான் வேகம் நன்றாக உள்ளது.

5) 6 ஜிபி ரூ.95. அன்லிமிடெட் ரூ.98 என்று ஏர்செல் பயன்படுத்தினால் இணைய வேகம் டாடா டோகோமோவில் கிடைப்பதில் சராசரியாக ஆறில் ஒரு பங்கு தான் கிடைக்கும். ஏர்செல்லில் தினமும் 24 மணிநேரமும் பயன்படுத்தினாலும் 2 ஜிபி கூட தாண்டாது. இப்போது BSNL-ல் 3G வருவதால் 3G மற்றும் மோடம் உள்ள போனாக வாங்கினால் இணைய வேகம் நன்றாக இருக்கும்)

செய்யவேண்டியவை

1.கேபிளுடன் கொடுக்கப்படும் Cdயில் இருந்து உங்கள் கைபேசிக்கான சாப்ட்வேர் அல்லது நோக்கியா பிசி சூட்டை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்யவும். பிறகு கைபேசியில் GPRS இணைப்பு பெற வேண்டும். (GPRS-க்கான செட்டிங்ஸ் கைபேசியில் default ஆக வைக்கவும். பின் போனிலேயே இணையத்திற்கு சென்று பார்க்க நோக்கியா போனாக இருந்தால் ”0” வை அழுத்தி கொண்டிருந்தால் இணையம் திறக்கும். அதில் ஏதாவது ஒரு இணைய பக்கத்தை திறந்து பார்க்க முடிந்தால் கைபேசி இணைய இணைப்பிற்கு தயாராக உள்ளது என்று அர்த்தம்.) பின் கைபேசியையும் கணிணியையும் USB கேபிளால் இணைக்க வேண்டும்.

2.தானாகவே கணிணி கைபேசியை இணைக்கும் வரை காத்திருக்கவும்.

3.Start -> Control Panel -> System -> Hardware -> Device Manager-ல் சென்று பார்த்தால் அதில் Modems இருக்கும். அதில் Double Click செய்தால் அதில் உங்கள் கைபேசியின் மாடல் (உதாரணமாக Nokia N72 USB Modem) இருந்தால் எல்லாம் சரியாக இருக்கிறது என்று பொருள்.

4.பிறகு Start -> Control Panel -> Network Connections சென்று பைல் மெனுவில் New Connection… என்பதை சுட்டினால் wizard ஒன்று வரும். அதில் Next கொடுத்து அடுத்து வருவதில் Connect to the Internet என்பதில் க்ளிக் செய்து Next-ஐ அழுத்தவும். அடுத்து வருவதில் Set up my Connection Manually என்பதில் க்ளிக் செய்து Next-ஐ அழுத்தவும். அடுத்து வருவதில் Connect using a dial-up modem என்பதில் க்ளிக் செய்து Next-ஐ அழுத்தவும். Isp Name என்பதில் ஏதாவது பெயர் (உதாரணமாக Dial Up) டைப் செய்து Next-ஐ அழுத்தவும். Phone Number என்பதில் Tata Docomo, Aircel என்றால் *99# என டைப் செய்து Next-ஐ அழுத்தி அடுத்து வருவதிலும் Next-ஐ அழுத்தவும். அடுத்துவரும் பக்கத்தில் “Add a shortcut to this connection to my desktop” என்பதில் டிக் போட்டு Finish என்பதை க்ளிக் செய்யவும். அவ்வளவுதான்.

5.Computer Desktop-ல் நீங்கள் பெயர் கொடுத்த ஐகான் இருக்கும். அதனை டபுள்க்ளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Dial என்பதை க்ளிக் செய்தால் சற்று நேரத்தில் இணையம் திறந்து அதற்கு அடயாளமாக டாஸ்க் பாரில் சிறு ஜகான் தோன்றும். கைபேசியிலும் சிறு ஜகான் (உலக உருண்டை அல்லது இருகோடுகள் போல)இடது மேற்பகுதியில் இருக்கும். உடனே பிரௌசரில் உங்களுக்கு தேவையான வலைப்பக்கத்திற்கு செல்லலாம். Internet Connection-ஐ நிறுத்த டாஸ்க் பாரில் இருக்கும் ஐகானில் வலதுபக்கம் க்ளிக் செய்து அதில் Disconnect என்பதை அழுத்தலாம்.

மேற்கண்ட அனைத்தும் செய்தும் கைபேசியில் இணையம் வந்து, கணிணியில் வரவில்லை என்றால் கைபேசியையும், கணிணியையும் Restart செய்து முயற்சிக்கவும்.

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க!

நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த மார்க்கம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தவை என ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம். இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion போன்ற தளங்கள் பிரபலமானவை.

ஒரு சில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க மட்டுமே முடியும் தரவிறக்க முடியாது. இதை போக்க ஒரு மென்பொருள் உள்ளது.

பயன்கள்:

இது இலவச மென்பொருள். நமக்கு தேவையான வீடியோவின் URL  கொடுத்து START பட்டனை அழுத்தினால் போதும் அந்த வீடியோ நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.

வீடியோ டவுன்லோட் திறன் மிகவும் வேகமாக உள்ளது. வீடியோவை தரவிறக்கும் போதே நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி(AVI,MP4,WMV). வீடியோவில் உள்ள ஆடியோவை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வசதி.

இப்படி ஏராளமான வசதிகளை பெற்று உள்ள இந்த மென்பொருளின் அளவு 7.19 MB மட்டும் தான்.

பயன் படுத்தும் முறை:

இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்க பட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும். அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.

அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

அடுத்து கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும்.