இணைய செய்தியோடை RSS

இணையங்களில் RSS – XML என்ற செய்தியோடைகள் மிக பிரபல்யமாகி விட்ட ஒரு நுட்பமாகும்.  அதை தொகுப்பது, அதற்கான வாய்ப்புகள், அது குறித்து விளக்கப்பட்டுள்ள பல தளங்கள், நம் விருப்பங்களின் உள்ளடக்கம் என்று ‘செய்தியோடை’ பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

சில காலமாக இந்த RSS ஓடை அல்லது RSS ஊட்டு என்பதை இணைய தளங்களில் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக இணைய தளங்களில் செய்தி வாசிப்போர் இதை அறிய வந்திருக்கக்கூடும். ஒரு செஞ்சதுரத்தில் XML என்றோ அல்லது RSS என்றோ குறிக்கப்பட்டிருக்கும்.இந்த செஞ்சதுரம் காணப்படும் இணையதளங்களில் இம்மாதிரி வசதி கிட்டும். அவையன்றி வலைப் பூக்களிலும் இம்மாதிரி வசதி உண்டு.
நண்பர் பத்ரியின் வலைப்பூ பதிவை அவ்வப்போது படிக்க எண்ணுகிறீர்களா? நீங்கள் உலகில்நடக்கும் விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளவரா? உங்களுக்கு பிடித்தமானவற்றை சுடச்சுட அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் இந்த RSS வசதியைப் பற்றி சிந்திக்க வேண்டும். மேலும் நீங்கள் யாஹூ மின் மடற்குழுக்களைப் படிப்பவாரா?அப்படியானால் நிச்சயம் இந்த வசதியை நீங்கள் பெற்றே ஆகவேண்டும். ஆமாம் இப்போது யாஹூ மின் மடற்குழுவிலும் இம்மாதிரி வசதியைத் தந்திருக்கிறார்கள்.
இது xml கோப்பு அடிப்படையில் அமைந்த ஒரு பொருளடக்கப் பட்டியல். ஆக்கத்தின் அடிப்படை விடயங்களான தலைப்பு, எழுதியவர், நேரம் மற்றும் எதைப் பற்றியது என்ற சிறு குறிப்பு அடங்கியவைதாம் இந்த பட்டியல். அவ்வப்போது கிடைக்கும் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள ஏற்பட்ட முறையே இது. இபோது அனேகமாக எல்ல வலைப்பூக்களிலும் பல இணைய தளங்களிலும் பயன்படுத்தப் படுகிறது.xml இன் ஒரு வகையான RDF கட்டமைக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கபடுவதால் RDF Site Summary என்றும், எளிதாக செய்திகளை பரிமாறிக் கொள்வதால் Really Simple Syndicationஎன்றும் மொத்ததில் RSS என்றும் அழைப்படுகிறது.

மேலும்…..