வாருங்கள்: உரையாடுங்கள் ;அழைக்கும் இணையதளம்

வந்தால் மட்டும் போதுமா? மெரும்பாலான இணையதள உரிமையாளர்கள் மனதில் உள்ள கேள்வி தான் இது. பல பெரிய இணைய நிறுவனங்கள் இந்த கேள்விக்கு பதில் காண முயன்று வருகின்றன.சிறிய‌ த‌ள‌ங்க‌ள் இப்போது தான் இந்த‌ கேள்வியின் முக்கிய‌த்துவ‌த்தை உண‌ர‌த்துவ‌ங்கியுள்ள‌ன‌.
அதாவ‌து இணைய‌வாசிக‌ள் இணைய‌த‌ள‌த்திற்கு விஜ‌ய‌ம் செய்தால் மாடும் போதுமா? ஒரு விருந்தாளியைப்போல‌ அவ‌ர்க‌ள் கொஞ்ச‌ நேர‌ம் தங்கியிருந்து ம‌ன் நிறைவோடு செல்ல‌ வேண்டும் என்று செய்தி த‌ள‌ங்க‌ள் போன்ற‌வை எதிர்பார்க்கின்ற‌ன‌.அது மட்டும் அல்லாம‌ல் அந்த‌ நிறைவு த‌ரும் உண‌ர்வில் அவ‌ர்க‌ள் மீண்டும் வ‌ருகை த‌ர‌ வேண்டும் என்று எதிர‌பார்க்கின்ற‌ன.

மாறாக‌ வ‌ழிப்போக்க‌ர்க‌ளை போல‌ இணைய‌வாசிக‌ளும் வ‌ந்தோம் சென்றோம் என‌ பிடிப்பில்லாம‌ல் இருந்தால் இணைய‌ விசுவாசிக‌ளை உருவாக்க‌ முடியாது அல்ல‌வா?

எந்த‌ ஒரு இணைய‌த‌ள‌மும் ப‌த்தோடு ப‌தினென்னு என்று இல்லாம‌ல் த‌ன‌க்கான‌ த‌னித்துவ‌த்தை பெற‌ இந்த‌ விசுவாச‌ம் அவ‌சிய‌ம்.

இணைய‌ வியாபார‌த்தில் ஈடுப‌ட்டிருக்கும் இ காமர்ஸ் த‌ள‌ங்க‌ளைப்பொருத்த‌ வ‌ரை இந்த‌ கேள்வி வேறு வ‌கையான‌ முக்கிய‌த்துவ‌த்தை பெறுகிற‌து. இணைய‌வாசிக‌ள் வ‌ந்தார்க‌ள் சென்றார்க‌ள் என்று இருந்தால் போதுமா? வ‌ந்த‌வ‌ர்க‌ள் பொருட்க‌ளை வாங்க‌ வேண்டாமா? மீண்டும் வாங்க‌ வ‌ர‌ வேண்டாமா?

மேலும்……

பின்னூட்டமொன்றை இடுக