வலைப்பதிவில் உங்கள் பதிவின் கீழ் கையெழுத்தை இட

நாம் கஷ்ட்டப்பட்டு எழுதும் பதிவில் கீழே நம்முடைய கையெழுத்து இருந்தால் எப்படி நன்றாக இருக்கும் . ஆன்லைன் signature உருவாக்க நிறைய தளங்கள் உள்ளது. இதில் ஒன்றை தான் நாம் இங்கு காண போகிறோம். இத் தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல் விண்டோ வரும்.
1. உங்களுடைய பெயரை கொடுத்து விட்டு கீழே உள்ள NextStep பட்டனை கிளிக் செய்யவும்.
2. அடுத்து வரும் விண்டோவில் உங்களுக்கு தேவையான Font Style தேர்ந்தெடுக்கவும்.
3. அடுத்து தேவையான Size செலக்ட் செய்யவும். (3,4,5) ஆகியவை சரியாக இருக்கும்.
4. அடுத்து வரும் விண்டோவில் தேவையான Color செலக்ட் செய்யவும்.
5. அடுத்து உங்கள் கையெழுத்து வரவேண்டிய சாய்வு (slope) செலக்ட் செய்யவும் பின்பு கீழே உள்ள NextStep பட்டனை அழுத்தவும் .
அவ்வளவு தான் உங்களுடைய கையெழுத்து தயாராகி விட்டது. உங்களுக்கு கீழே உள்ளதை போல் விண்டோ வரும்.
இதில் நான் மேலே காட்டியுள்ள Want to Use This Signature என்பதனை க்ளிக் செய்யவும்.
Advertisements

கம்ப்யூட்டர் பாதுகாப்பு

கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து புழக்கத்தில் இருக்கும்  சொற்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கீழே தந்துள்ளோம்.

1. ஆண்ட்டி வைரஸ் (Anti Virus): அப்ளிகேஷன் சாப்ட்வேர். இன்றைய அளவில் கிடைத்துள்ள வைரஸ் புரோகிராம்களில் காணப்படும் சிக்னேச்சர் என்னும் கோடிங் முறையின் அடிப்படையில், ஹார்ட் டிஸ்க்கினை ஸ்கேன் செய்து, அதில் ஏதேனும் வைரஸ், ட்ரோஜன், வோர்ம் ஆகியன இருந்தால், அந்த புரோகிராம்களைக் கண்டறிந்து அழிக்கும். அல்லது குவாரண்டைன் என்னும் தனி இடத்திற்கு அனுப்பும். நமக்கும் எச்சரிக்கை கொடுக்கும். நீக்க முடியவில்லை என்றால், ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் இடத்தைக் காட்டி எச்சரிக்கை செய்திடும்.

2. அட்டாக் (Attack): நம் அனுமதி பெறாத ஒரு நபர் அல்லது ஒரு புரோகிராம், நம் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டில், பல்வேறு காரண காரியங்களுக்காகக் கொண்டு வரும் செயல்பாடு.

3.பேக் டோர் (Back Door): இதனைச் சில சமயங்களில் ட்ரேட் டோர் (Trap Door) எனவும் அழைக்கின்றனர். அப்ளிகேஷன் புரோகிராமில், புரோகிராமை வடிவமைத்தவரால் அமைக்கப்படும் வழி. புரோகிராமில் ஏதேனும் பிழை இருந்தால், இந்த வழியாக புரோகிராமின் வரிகளை அடைந்து செப்பனிடுவார். ஆனால் இது போன்ற வழி இருப்பது அடுத்தவருக்குத் தெரிந்தால், புரோகிராம் செயல்படும் தன்மையையே அவர் மாற்றிவிடலாம்.
4. பயர்வால் (Firewall): இது ஒரு சாப்ட்வேர் அல்லது ஹார்ட்வேர். உங்கள் கம்ப்யூட்டரின் நெட்வொர்க்கைக் காப்பாற்றும் வசதி. இன்டர்நெட் அல்லது நெட்வொர்க் மூலமாக அனுமதியின்றி, உங்கள் கம்ப்யூட்டருக்குள் வரும் புரோகிராமினைத் தடுத்து நிறுத்தும். உங்களுக்கும் எச்சரிக்கை தரும். சில வேளைகளில் உங்கள் அனுமதியைப் பெற்று அந்த புரோகிராமினை அப்போதும் அடுத்து வருகையிலும் அனுமதிக்கும்.

தொடர்ந்து…………

மென்பொருட்களின் சீரியல் எண்ணை இலவசமாகப் பெற

இன்று உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினி நம்மிடம் வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது  கம்ப்யூட்டர் ரூபாய் 10000 அளவிற்கு கூட கிடைகின்றது. ஆனால் 10000 கொடுத்து வாங்கினாலும் உடனே அதில் வேலை செய்ய முடியவில்லை . அதில் இயங்குதளங்களை பதிந்தால் மட்டுமே நாம் அனைவரும் உபயோகிக்க முடியும். மற்றும் நமக்கு பிடித்த மென்பொருட்களை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி கொள்கிறோம். ஆனாலும் அப்படி தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களை விட விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்கள் மிகுந்த வசதிஉடனும் பாதுகாப்புடனும் இருக்கும். ஆனால் நம்மால் விலை கொடுத்தும் வாங்க முடியாது. இந்த நிலையில் நமக்கு உதவி செய்கிறது இந்த இணையதளம். இணையத்தில் அனைத்து மென்பொருட்களும் (traial versions) இலவசமாக கிடைக்கும். அதை தரவிறக்கி நம் கம்ப்யூட்டர்யில் சேமித்து கொள்ளவும். அதை install செய்வதற்கு முன்னால் இந்த இணயத்தளம் செல்லவும் http://www.youserials.com/ இதில் அனைத்து வகையான மென்பொருட்களின் சீரியல் எண்களும்   கொடுத்து உள்ளார்கள். உங்களுக்கு எந்த மென்பொருட்களின் சீரியல் எண் வேண்டுமோ அந்த மென்பொருட்களின் பெயரை அதில் டைப் செய்து என்ட்டர் கொடுக்கவும் . இப்பொழுது கிடைக்கும் எண்ணை copy செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்யும் போது கொடுக்கவும்

நன்றி்-வந்தேமாதரம்

பிளாக்கரில் சுருக்கத்தை காட்ட ‘மேலும் வாசிக்க’ வசதி

நமது வலைப்பதிவு வேகமாக திறக்கும்படி அமைத்து இருந்தால்தான் வாசிப்பவர்கள் விரும்புவர். சில வலைப்பதிவுகள் திறக்க நேரம் பிடிக்கும் போது அவற்றை வாசிக்காமல் / தொடர்ந்து செல்லாமல் விட்டு விடுவதுண்டு. அணுகுவதற்கும் எளிமையாக இருக்க வேண்டும்.

நாம் எவ்வளவுதான் சிறப்பாக எழுதி வந்தாலும் நமது வலைப்பதிவின் வடிவமைப்பு சரியில்லாமல் இருந்தால் / திறக்க அதிக நேரம் பிடித்தால் வாசிப்பவர் நமது தளத்திற்கு தொடர்ந்து வருவதை விரும்ப மாட்டார். RSS செய்தியோடை போன்ற மாற்று வழிகளில் வாசிப்பார். அல்லது வாசிப்பதை நிறுத்தி விடுவார்.

இந்த வகையில் நமது வலைப்பதிவை வாசிக்க வருபவர்களுக்கு நல்ல வடிவ /  சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும். ‘ஆள் பாதி. ஆடை பாதி’ என்பதை போல மக்களை கவருவதில் ஒரு வலைப்பதிவின் வடிவமைப்பும் முக்கிய பங்காற்றுகிறது. எழுதுவதில் நேரத்தை செலவழிப்பது போல வலைப்பதிவை வடிவமைப்பதற்கும் சிறிது நேரம் ஒதுக்கலாம். சில மணி நேரங்கள் செலவழித்தாலே நமது வலைப்பதிவிற்கு நல்ல வடிவமைப்பை கொடுத்து விடலாம்.

பெரும்பாலும் நமது வலைப்பதிவின் முகப்பில் அதிக இடுகைகள் தோன்றும்படி வைத்து இருப்போம். உதாரணத்திற்கு முகப்பு பக்கத்தில் ஏழு இடுகைகள் வரும்படி வைத்து இருப்பதாக கொள்வோம். ஒவ்வொரு இடுகையும் முழுமையாக தோன்றும்.

இதனால் வரக்கூடிய பின்னடைவு என்னவெனில் உங்கள் வலைப்பதிவை வாசிப்பவர் திறக்கும் போது ஏழு இடுகைகளும் அதில் உள்ள படங்களும் தோன்றுவதற்கு அதிக நேரம் பிடிக்கும். கடைசியாக உள்ள ஏழாவது இடுகையை பார்க்க வேண்டுமெனில் வாசிப்பவர் ஸ்குரோல் (Scroll) செய்தே ஓய்ந்து போவார்.

மேலும்…….

எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண

கால ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக Divx, FLV, MP4, MKV என்று வீடியோக்கள் புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன. தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது.

இது போன்ற வீடியோக்கள் திறக்க உங்கள் கணினியில் அவற்றிற்கு ஏற்ற கோடக் (Codec) தேவைப்படும்.விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர். நீங்கள் திறக்கும் வீடியோ கோப்புகள் இதில் தான் தெரியும். ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோ வடிவத்திற்கான கோடக்குகளுடன் வருவதில்லை.

அவற்றை இணையத்தில் தேடி உங்கள் கணினியில் நிறுவ வேண்டி வரும். சில சமயம் வேலை செய்யும். பல நேரம் காலை வாரும். பெரிய தலைவலி பிடித்த வேலை இது. புதிதாக கணினி வாங்கிய நண்பர்கள் / உறவினர்கள் அடிக்கடி என்னிடம் கொண்டு வரும் பிரச்சனை இது.

இந்த இம்சையில் இருந்து விடுபட ஒரே வழி விண்டோஸ் மீடியா ப்ளேயரை உபயோகிப்பதை நிறுத்தி விடுங்கள். எல்லா வீடியோ கோப்புகளையும் தடை இன்றி திறக்க ஒரு மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.

VLC Media Player. கணினிக்கான மிகச்சிறந்த மீடியா பிளேயர் இது. இதற்கென நீங்கள் எந்த வீடியோ கோடக்குகளையும் தனியே நிறுவ வேண்டியதில்லை. எல்லாம் உள்ளடங்கியே வருகிறது. அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து விதமான வீடியோவையும் திறக்கிறது.

மேலும்……

ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க

முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம். அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். அதனை நம் பயன்பாட்டுக்கு C: – 20GB , D: – 30GB , E: – 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம். உபயோகிக்கும் போது C: – இயங்குதளம் , D: – மென்பொருள்கள் , E: – பாடல்கள் , வீடியோ என்று சேமித்து விருப்பப்படி உபயோகித்து கொள்ளலாம்.

பெரும்பாலும் இவை நீங்கள் கணினி வாங்கும் போதே செய்யப்பட்டு வந்து விடும். இதில் எனக்கு ஒரு பிரச்சினை தோன்றியது. C: -ல் 20GB மட்டும் இருந்ததால் நிறுவும் மென்பொருள்களால் நிறைந்து நாளடைவில் Disk is full என்று வந்து விட்டது. D: -ல் அதிகமான இடம் இருந்தாலும் அதனை C: -க்கு நகர்த்துவது கடினமான காரியம்.

இது போன்ற தருணங்களில் முன்பு FDISK எனும் DOS டூலை உபயோகித்து வந்தேன். மொத்த ஹார்ட்டிஸ்க்கையும் திரும்ப பிரித்து C: அதிகமாகவும் D: , E: அளவு குறைவாகவும் நிறுவ வேண்டி இருந்தது. இந்த டூலை உபயோகிக்கும் போது ஹார்ட்டிஸ்க்கில் இருந்த அனைத்து தகவல்களும் அழிந்து விடும். மீண்டும் format செய்து புதியது போல் இயங்குதளம் நிறுவி உபயோக படுத்த வேண்டி இருக்கும். 😦

ஆனால் Easeus Partition Master மென்பொருளை அறிந்து கொண்ட பிறகு இந்த வேலை மிக எளிதாயிற்று. இதன் மூலம் எளிய வழி முறைகள் மூலம் பார்டிசன் அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். பார்டிசன்களை அப்படியே காப்பி செய்து கொள்ளலாம். புதிய பாடிசன்களை உருவாக்கலாம். பார்டிசன்களை நீக்கலாம். ஏற்கனவே உள்ள பார்டிசன்களை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. பார்டிசன்களை Format செய்து கொள்ளலாம்.

இவை அனைத்தையும் உங்கள் ஹார்ட்டிஸ்கில் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் இல்ல பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம். இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் இயங்கும்.

மேலும்……..