இமெயில் உபயோகிப்போருக்கான எச்சரிக்கை

இமெயில் என்பது ரேஷன் கார்டு போல தேவைப்படும் ஓர் வசதியாக உள்ளது. யாரும் இப்போது தபால் அலுவலகத்தை நாடுவதே இல்லை. அவசரத்திற்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் இமெயில் அக்கவுண்ட் கட்டாயம் நமக்குத் தேவயாய் உள்ளது. ஆனால் இதில் பலரும் தவறு இழைக்கின்றனர். திருத்திக் கொள்ள வேண்டிய தவறுகளை இங்கு காண்போம்.

1. முதலாவதாக ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு இன்றைய இணையச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். வர்த்தக ரீதியான இமெயில் தரும் நிறுவனத்தின் இமெயில் அக்கவுண்ட்டை பணம் செலுத்திப் பெற்றுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இதனை உங்கள் வர்த்தகத்திற்குப்பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். உங்கள் அக்கவுண்ட் உள்ள சர்வர் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் உங்களுக்கான இமெயில் சேவை கிடைக்காது.

ஆனால் உங்களின் இமெயில் தெரிந்தவர்கள் அதற்கு மட்டுமே மெயிலை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களை வெவ்வேறு நிறுவன சர்வர்கள் மூலம் வைத்திருந்தால் அவை உங்களுக்கு இது போன்ற சிக்கலான நேரத்தில் உதவும் அல்லவா? பொதுவாக வர்த்தக பயன்பாட்டிற்கு ஒன்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான பரிமாற்றத்திற்கென ஒன்றும் மற்ற இல்ணைய தேடல்களுக்கு ஒன்றுமாக வைத்துக் கொள்வது நல்லது.

2. நீங்கள் வெகு நாட்களாக ஒரு இமெயில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்கள் என்பதற்காக அதனையே வைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் வெகுநாட்கள் பயன்படுத்திய இமெயில் அக்கவுண்ட்கள் ஸ்பாம் மெயில் அனுப்புபவர்கள் வசம் நிச்சயம் சிக்கியிருக்கும். எனவே சில ஆண்டுகள் சென்ற பின்னர் அதனை விடுத்து புதிய அக்கவுண்ட் திறப்பது தான் நல்லது.

3. இமெயில் பயன்பாட்டிலும் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உங்கள் இல்லம் இல்லாமல் வெளியே உங்கள் அலுவலகத்திலோ அல்லது இன்டர்நெட் மையங்களிலோ உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துபவராக இருந்தால் பயன்பாட்டிற்குப் பின் இமெயில் அக்கவுண்ட் தரும் சர்வரில் அக்கவுண்ட்டை முறையாக மூடிவிட வேண்டும். இல்லையேல் அடுத்து அந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் இமெயிலைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மூடுவது மட்டுமின்றி அந்தக் கம்ப்யூட்டரின் கேஷ் மெமரியைக் காலி செய்துவிடுவதும் நல்லது.

தொடர்ந்து வாசிக்க…..

ஜிமெயில் இப்போது தமிழில்

உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் பார்த்து உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கின் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ சொடுக்கி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பொத்தானை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.(படத்தை பெரிதாக்க மேலே சொடுக்கவும்)மேலும் தொடர……

தமிழில் மின்னஞ்சல் எழுதுவது எப்படி

கணினியில் தமிழ் இமெய்ல் எழுத ஆயத்தமாக்கல். 
Preparing to write Tamil eMail in computer.

குறிப்பு: தமிழ் எழுத்துரு, தமிழ் விசப்பலகை என்பவை உங்கள் கணினியில் இல்லை என்றால் எ-கலப்பை/ஆவரங்கால் என்பவற்றை முதலில் டவ்ண்லோட் செய்து இன்ஸ்றோல் செய்க.
Note: If you need to install Tamil fonts and keyboard drivers, download and install the free Tamil software eKalappai/Avarangal, etc…

http://www.araichchi.net/kanini/kanini.html

 

 

How to Setup Outlook Express for Tamil

eMail?

மேலும்……

இலவச ஞாபகப்படுத்தல் சேவை

நீங்கள் அன்றாட வாழ்வில் நாளாந்தம் எத்தனையோ விடயங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்தி வருகிறீர்கள் என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உங்கள் மிக வேகமான நேரமேயில்லாத நிலையில் முக்கியமான சில நிகழ்வுகள் கூட உங்களால் மறக்கப்பட்டு விடலாம்.

8.jpg

அவற்றை குறித்த நாளில் உரிய நேரத்திற்கு ஞாபகப்படுத்தித் தரும் சேவையாக YourLi.st என்ற இணையத்தளத்தைக் குறிப்பிடலாம். இதில் என்ன விசேடம் தெரியுமா? எமக்குத் தேவையான Reminder களைப் பெற்றுக் கொள்ள அவ்விணையத்தளத்தில் Register ஆக வேண்டிய கட்டாயமில்லை.

மேலும்……