அறிமுகம்

இறைவனின் திருப் பெயரால்…..

தமிழ் இணைய நண்பர்களை அன்புடன் வரவேற்கிறேன்.

நீங்கள் இணையத்திற்கு புதியவரா?  உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இணையம் என்னும் பெருங் கடலில் அதிநவீன கப்பல்களில் பயணம் செய்பவர்களுக்கு மத்தியில் சாதாரண கட்டுமரம் கூட இல்லாமல் வெறும் கட்டையை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி பயணம் செய்வது? என்று கவலைப்படுகிறீர்களா? இனி கவலையை விடுங்கள். உங்களுக்குக் கைகொடுக்க இந்த ‘தமிழ் இணைய நணபன்’ இருக்கிறான்.

இணையத்தைப் பற்றியும் வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் பற்றியும் அனைத்து விபரங்களையும் இப்பதிவின் மூலம் தாங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு இணையத்தைப் பற்றி கற்றுத் தரும் அளவுக்கு நான் அதிகம் அறிந்தவன் அல்ல என்றாலும், அறிந்த வரை அடுத்தவருக்கு அறிவித்துக் கொடுக்க வேண்டும் என்னும் ஆவல் உள்ளவன். இணைய உலகில் முதன் முதல் அடியெடுத்து வைத்தபோது எதுவுமே தெரியாமல் இருந்து பின்னர் படிப்படியாக இப்படி ஒரு பதிவை உருவாக்குவது வரை கற்றுக் கொண்டேன்.

என்னை விட அதிகம் அறிந்தவாகள் இணையத்தைப் பற்றி என்னிடம் கேட்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். துவக்கத்தில் நான் இருந்த நிலையில் இப்போது நீங்கள் இருக்கிறீர்கள். கொஞ்சம் கவனம் செலுத்தி கற்றுக் கொண்டால் பிறருக்குக் கற்றுத்தரும் அளவுக்கு நீங்கள் வளரலாம்.

இணையத்தைப் பற்றி தாங்கள் அறிந்த செய்திகளை பிறருக்கும் கற்றுத் தர விரும்பும் இணைய ஆர்வலர்களை அன்புடன் வரவேற்கிறேன். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் பரந்த நோக்கம் கொண்ட பண்பாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

அன்புடன்

மஸ்தூக்கா

 

பின்னூட்டமொன்றை இடுக