விண்டோஸை வேகப்படுத்த (மேலும்) 20 வழிகள் #2

விண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம் விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது.ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை. அந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம்.

சென்ற வாரம், மெதுவாக இயங்கும் விண்டோஸ், வேகத்தில் இயங்க அனைத்து வகை வழிகளாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து 20 வழிகள் தரப்பட்டன. மேலும் இருபது வழிகள் இந்த வாரம் தரப்படுகின்றன.

இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட் ரேட்டர் மற்றும் ஹெல்ப் டெஸ்க் வல்லுநர்கள் எனப் பலரிடம் திரட்டியவை. நீங்களும் இவற்றை முயற்சித்துப் பாருங்களேன்.

1. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவது சிரமத்தைத் தரும். இதனை அதிகரிக்கலாமே!

3. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ பெற்று, பெர்பார்மன்ஸ் டேப் கிளிக் செய்து அதில் Adjust for best performance”தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.

4. எப்போதாவது விண்டோஸ் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? அப்படியானால் உங்கள் ஹார்ட் டிரைவ் சரியாக பார்ட்டிஷன் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். டிஸ்க்கில் உள்ள பைல்களை அழிக்காமலேயே, ஹார்ட் டிரைவை பார்ட்டிஷன் செய்யக் கூடியபுரோகிராம்கள் நிறைய இணையத்தில் கிடைக்கின்றன.

மேலும் தொடர…………..

Advertisements

விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்-1

விண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம் விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது. தொடக்கத்தில் உள்ள ஒரு சிஸ்டத்தின் வேகம் போகப் போகக் குறைவது பலருக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதில் இந்த சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனக் குறைவும் உள்ளது. அவையும் சேர்ந்தே சிஸ்டத்தின் வேகக் குறைவிற்குக் காரணமாய் அமைந்துள்ளது.

ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை. அந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட் ரேட்டர் மற்றும் ஹெல்ப் டெஸ்க் வல்லுநர்கள் எனப் பலரிடம் திரட்டியவை. நீங்களும் இவற்றை முயற்சித்துப் பாருங்களேன்.

1. ஹார்ட் டிஸ்க்கின் சுழற்சி, அதன் மூலம் பைல் தேடும் நேரம் ஆகியவை சிஸ்டம் இயங்குவதில் முக்கிய இடத்தைக் கொள்கின்றன. எனவே சிதறலாகப் பதிந்த பைல்களை ஒருமுகப்படுத்தும் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்ளுங்கள். விண்டோஸ் இணைந்து வரும் டிபிராக் பைல் அல்லது ஸ்மார்ட் டிபிராக் (SmartDefrag) போன்ற மற்றவர்கள் தந்துள்ள புரோகிராம்களை இதற்குப் பயன்படுத்தலம.ஹார்ட் டிஸ்க் என்று பொதுவாக இல்லாமல் விண்டோஸ் பேஜ் பைல் மற்றும் ரெஜிஸ்ட்ரியைக் குறிப்பாக டிபிராக் செய்திட வேண்டும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2. தற்காலிக பைல்கள் உருவாக்கம் நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொண்டு அதன் பைல் தேடும் செயல்பாட்டினைத் தடுக்கும். எனவே டெம்பரரி பைல் போல்டர், ரீசைக்கிள் பின், ஹைபர்னேஷன் போன்ற போல்டர்கள் மற்றும் டைரக்டரிகளில் உள்ள தற்காலிக பைல்களை நீக்க வேண்டும். Treesize போன்ற புரோகிராம்களின் உதவி கொண்டு எந்த புரோகிராம்கள், பைல்கள் உங்கள் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளன என்று பார்த்து செயல்படவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

மேலும் தொடர…..

புது கம்ப்யூட்டர் வாங்கியிருக்கிறீர்களா? படியுங்கள் கீழே.

புதியதாக டெஸ்க் டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை உங்களுக்கென வாங்கியுள்ளீர்களா! பாராட்டுக்கள். அந்த கம்ப்யூட்டர் உங்களுக்கு எந்த வேலைக்கு வேண்டுமானாலும் பயன்படலாம். வீட்டில் பொழுது போக்க, மல்ட்டி மீடியா பார்த்து ரசிக்க, குழந்தைகள் விளையாட, சிறிய அலுவலகங்களில் பயன்படுத்த, சிறிய வர்த்தக காரியங்களுக்கு பயன்படுத்த என நோக்கம் எது வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் சற்று தாமதியுங்கள்.

உடனே கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் தொடர்பு கொண்டு உங்கள் நண்பர்களுக்கெல்லாம் நீங்கள் கம்ப்யூட்டர் வாங்கிய செய்தியை இமெயிலாக அனுப்ப முயற்சிக்க வேண்டும். அல்லது உங்களுக்குப் பிடித்தமான பாடல்களை அல்லது ஆடல் காட்சிகளை உடனே இயக்கி ரசிக்க வேண்டாம். அந்த கம்ப்யூட்டரில் பாதுகாப்பாக இயங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அவை எவை என இங்கு பார்க்கலாம்.

1.எமர்ஜென்ஸி டிஸ்க் தயாரியுங்கள்: சில கம்ப்யூட்டர்களுடன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சிக்கலான நேரங்களில் மீண்டும் பதிந்திட ஓ.எஸ். உள்ள சிடி அல்லது டிவிடியினை வழங்கி இருப்பார்கள். சில நிறுவனங்கள் ரெகவரி சிடி என ஒன்றை வழங்குவார்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் முடங்கிப் போனால் இந்த ரெகவரி சிடியை இயக்கி கரப்ட் ஆன பைல்களை சரி செய்திடலாம். இது போன்ற சிடிக்கள் கொடுக்கப்பட்டால் அவற்றைப் பயன்படுத்தி புதிய கம்ப்யூட்டரில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அமைத்தவுடன் பத்திரமாக வைத்திட வேண்டும்.

அதனை எங்கு பத்திரமாக வைத்துள்ளீர்கள் என்பதனையும் குறித்து வைக்க வேண்டும். ஒரு சில நிறுவனங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்தே தரப்படுகிறது என்று கூறி அதற்கான விலையையும் சேர்த்தே நம்மிடம் வாங்கி விடுவார்கள். ஆனால் லைசன்ஸ் கீ என்று சொல்லி ஒரு பேப்பர் உரிமை கொடுப்பார்கள். சில நிறுவனங்களோ சிபியு கேபினட்டின் பின்புறம் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதுதான் ஓ.எஸ். லைசன்ஸ் என கூறிவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

இப்படி ஒன்றும் உங்களிடம் தரப்படவில்லை என்றால் உடனே சிஸ்டத்துடன் வந்துள்ள மேனுவல் எனப்படும் குறிப்பு நூலைப் படித்து எப்படி எமர்ஜென்சி ஓ.எஸ். சி.டி தயாரிப்பது என அறிந்து அதில் குறிப்பிட்டுள்ள வழிகளைப் பின்பற்றி ஒரு எமர்ஜென்ஸி ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிடி தயரித்துக் கொள்ளுங்கள். ஒன்றுக்கு இரண்டாகத் தயாரித்து வைத்துக் கொள்வதும் நல்லது.

மேலும் படிக்க…..

வேலை வேட்டை தளம்

வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது.
வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள் பயோடேட் டாவை இடம்பெற செய்யலாம்.
.
வேலைக்காக பொருத்தமானவர் களை தேடி கொண்டிருக்கும் நிறு வனங்கள் அதற்கான அறிவிப்பை இடம் பெற செய்யலாம். ஆக, வேலைத் தேடுபவர்கள் தங்களுக்கு ஏற்ற வாய்ப்பு எந்தெந்த நிறுவனங் களில் இருக்கிறது என்று இந்ததளங் களின் மூலம் தேட முடியும். அதே போல வர்த்தக நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நபர்கள் பற்றிய விவரங்களை பயோடேட்டா கடலில் தேடிப்பார்க்க வும் முடியும்.

இந்த வகையில் வேலைத் தேடுபவர் மற்றும் வேலை தருபவர் இடையே பாலமாக வேலைவாய்ப்பு தளங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு தளத்திற்கும் அதன் தனித் தன்மைக்கேற்ப கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், புகழ் பெற்ற மான்ஸ்டர் டாட்காம் தளத்தில் துவங்கி, வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தளங்களின் பொது அம்சம் மேலே குறிப்பிட்டவையாகத்தான் இருக்கும்.

ஆனால் ஜாப்-ஹன்ட் தளத்தில் இந்த அம்சம் எதுவுமே கிடையாது. இந்த தளத்தில் வேலை வாய்ப்பை தேடிக் கொண்டிருப்பவர்கள் தங்களை பற்றிய விவரங்களை இடம் பெற வைப்பதற் கான வழி கிடையாது.

நிறுவனங்களும் தங்களது அறிவிப்பை இங்கே இடம் பெற வைக்க முடியாது. என்றாலும் கூட இந்த தளம் வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கு சகல விதங்களிலும் உதவக்கூடிய தளமாகவே இருக்கிறது.

உண்மையில் வேலை வேட்டை என்று பொருள்படும் இந்த தளத்தின் பெயருக்கு 100 சதவீதம் பொருந்தக் கூடிய வகையில் இந்த தளம் வேலை வாய்ப்பை பெற உதவி செய்கிறது.

வேலை தேடுபவர்களின் விவரங் களை பதிவு செய்ய அனுமதிக்கா விட்டாலும், இந்தத்தளம், மற்ற வேலை வாய்ப்பு தளங்களுக்கான இணைப்புகளை வழங்குகிறது. இவ்வாறு 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்பு இணைப்புகள் இந்த தளத்தின் அடிநாதமாக விளங்குகின்றன.

மேலும்…….

வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.

ஆச்சர்யமாக இருக்கிறது, வின்மணி வைரஸ் நீக்க சேவைக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்க்கும் போது. இதனை உருவாக்கியவர் கேட்டுக்கொன்டதன் பேரில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு அறிமுகமாகவே இந்த சேவை பற்றி எழுதியிருந்தேன்.

இந்த பதிவை படித்துவிட்டு பல வாசகர்கள் வின்ம்ணி வைரஸ் சேவையை பயன்படுத்திவிட்டு அது மிகச்ச்சிறப்பாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். அவர்களின் உற்சாகமான பின்னூட்டம் மூலமே வைரஸ் நீக்க சேவை மகத்தானதாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிலர் இதன் முழு வடிவத்தை கேட்டுள்ளனர். இன்னும் சிலர் இது லேப்டாப்பில் சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சந்தையில் வைரஸ் நீக்க மென்பொருள் பல இருக்கின்றன். என்னினும் எதையும் முழுமையானது என சொல்ல முடியாது.அப்ப‌டியிருக்க‌ ஒரு த‌மிழ‌ரால் உருவாக்க‌ப்ப‌ட்ட வைர‌ஸ் நீக்க‌ மென்பொருள் ப‌ன்னாட்டு நிறுவன‌ தாயாரிப்புக‌ளை மிஞ்ச‌க்கூடிய‌தாக‌ இருப்ப‌து ம‌கிழ்ச்சியை த‌ருகிற‌து.

இந்த‌ மென்பொருளின் பின்னே உள்ள‌ நாக‌ம‌ணி என்ப‌வ‌ர் த‌ன்னைப்ப‌ற்றி அட‌க்கத்தோடு குறிப்பிட்டுள்ள‌தை இங்கே த‌ருகிறேன்.

”இன்று தான் அனைத்து பின்னோட்டங்களையும் பார்த்தேன். முதன் முதலில் இந்த

தமிழனுக்கு மதிப்பளித்து ஒரு பதிவு தந்தீர்கள், என் நோக்கம் அனைவருக்கும் இலவசமாக இது கிடைக்க
வேண்டும் என்பது தான். இந்த வைரஸ் ரீமுவர் பற்றி விரிவாக கேட்டு இருந்திர்கள் சொல்கிறேன்..
என் பல வருட கனவு ஒரு முழுமையான ஆண்டிவைரஸ் கொடுக்க வேண்டும் என்பது நாம் கொடுக்கும்

ஆண்டிவைரஸ் பத்தோடு பதினோன்றாக இருந்து விடக்கூடாது என்ற எண்ணம். பல முன்னனி

ஆண்டிவைரஸ்களால் நீக்க முடியாத வைரஸை மட்டும் கவனத்தில் கொண்டு அதை எப்படி நீக்கலாம் என்று

யோசித்து உருவாக்கப்பட்டுள்ளது. வைரஸின் மூலம் எங்கு என்பதை கண்டு அதை முழுமையாக நீக்கும்.
கம்யூட்டருக்கு பாதிப்பை கொடுக்கும் வைரஸை மட்டும் தான் நீக்கும். அது மட்டும் இல்லாமல் கம்ப்யூட்ட்ரின்
வேகத்துக்கு தடையாக இருக்கும் மால்வேர் என்று சொல்லக்கூடிய Script -ஐயும் நீக்கும். பல ஆண்டிவைரஸ்-கள்
வைரஸ் வந்த பின் செயலாற்றுவதில்லை ஆனால் அப்படிப்பட்ட வைரஸையும் நீக்கும்.

தொடர்ந்து……

கம்ப்யூட்டரிலிருந்து பைல்களை முழுமையாக நீக்க ஷ்யூர் டெலீட்

கம்ப்யூட்டரிலிருந்து நீங்கள் உருவாக்கிய பைல் ஒன்றை டெலீட் செய்துவிட்டீர்கள். அது அழிந்து போய்விட்டதா? நீக்கப்பட்டுவிட்டதா? யாரும் பார்க்க முடியாதபடி காணாமல் போய்விட்டதா? இல்லை, இல்லவே இல்லை. அந்த பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் சென்று தங்கலாம். நீங்கள் புத்திசாலியாய் இருந்தால், அதிலிருந்தும் அழித்துவிட்டிருக்கலாம். ஆனால் அப்போதும் அது கம்ப்யூட்டரிலிருந்து அழிவதில்லை.

உங்கள் கம்ப்யூட்டர் அதனை அழிப்பதில்லை. அதற்குப் பதிலாக, அந்த பைல் இருந்த இடத்தை, அடுத்த பைல் வந்து தங்கலாம் என்று அறிவிக்கிறது. எனவே திறமையாக எழுதப்பட்ட ஒரு புரோகிராம் அந்த பைல் இருக்கும் இடத்தை, விதத்தை அறிந்து. பின் மீண்டும் மீட்டு உங்களுக்குத் தரலாம். அல்லது அடுத்தவர்கள் அதனைக் கண்டறியலாம். குறிப்பாக இந்த பைல்களில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களான, பேங்க் அக்கவுண்ட் எண், பாஸ்வேர்ட் ஆகியவை இருந்தால் அவை எந்த நிலையிலும் மற்றவர்களுக்குச் சென்றுவிடக்கூடாது.

எப்படி ரகசியசெய்தி எழுதிய தாள் ஒன்றை நாம் கிழித்துப் போட்டாலும், பொறுமையான நபர் ஒருவர் அந்த துண்டுகளைப் பொறுக்கி எடுத்து, ஒட்டி தகவலைத் தெரிந்து கொள்ளலாமோ, அதே போல கம்ப்யூட்டரில் அழிக்கப்பட்ட, நீக்கப்பட்ட ஒரு பைலை யார் வேண்டுமானாலும், சரியான புரோகிராம்கள் வழியாக எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்ந்து வாசிக்க