இணைய செய்தியோடை RSS

இணையங்களில் RSS – XML என்ற செய்தியோடைகள் மிக பிரபல்யமாகி விட்ட ஒரு நுட்பமாகும்.  அதை தொகுப்பது, அதற்கான வாய்ப்புகள், அது குறித்து விளக்கப்பட்டுள்ள பல தளங்கள், நம் விருப்பங்களின் உள்ளடக்கம் என்று ‘செய்தியோடை’ பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

சில காலமாக இந்த RSS ஓடை அல்லது RSS ஊட்டு என்பதை இணைய தளங்களில் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக இணைய தளங்களில் செய்தி வாசிப்போர் இதை அறிய வந்திருக்கக்கூடும். ஒரு செஞ்சதுரத்தில் XML என்றோ அல்லது RSS என்றோ குறிக்கப்பட்டிருக்கும்.இந்த செஞ்சதுரம் காணப்படும் இணையதளங்களில் இம்மாதிரி வசதி கிட்டும். அவையன்றி வலைப் பூக்களிலும் இம்மாதிரி வசதி உண்டு.
நண்பர் பத்ரியின் வலைப்பூ பதிவை அவ்வப்போது படிக்க எண்ணுகிறீர்களா? நீங்கள் உலகில்நடக்கும் விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளவரா? உங்களுக்கு பிடித்தமானவற்றை சுடச்சுட அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் இந்த RSS வசதியைப் பற்றி சிந்திக்க வேண்டும். மேலும் நீங்கள் யாஹூ மின் மடற்குழுக்களைப் படிப்பவாரா?அப்படியானால் நிச்சயம் இந்த வசதியை நீங்கள் பெற்றே ஆகவேண்டும். ஆமாம் இப்போது யாஹூ மின் மடற்குழுவிலும் இம்மாதிரி வசதியைத் தந்திருக்கிறார்கள்.
இது xml கோப்பு அடிப்படையில் அமைந்த ஒரு பொருளடக்கப் பட்டியல். ஆக்கத்தின் அடிப்படை விடயங்களான தலைப்பு, எழுதியவர், நேரம் மற்றும் எதைப் பற்றியது என்ற சிறு குறிப்பு அடங்கியவைதாம் இந்த பட்டியல். அவ்வப்போது கிடைக்கும் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள ஏற்பட்ட முறையே இது. இபோது அனேகமாக எல்ல வலைப்பூக்களிலும் பல இணைய தளங்களிலும் பயன்படுத்தப் படுகிறது.xml இன் ஒரு வகையான RDF கட்டமைக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கபடுவதால் RDF Site Summary என்றும், எளிதாக செய்திகளை பரிமாறிக் கொள்வதால் Really Simple Syndicationஎன்றும் மொத்ததில் RSS என்றும் அழைப்படுகிறது.

மேலும்…..

உலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்!

தற்போதைய அதிவிரைவுக் கணினி ரோட்ரன்னரின் ஒரு பகுதி!நொடிக்கு ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் (Petaflops) கணக்கீடுகளை நிகழ்த்தும் அதிவிரைவுக் கணினி (Supercomputer) களை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனம் IBM, தற்போது அதனைச் சாத்தியப் படுத்தியுள்ளது.
 
கணினி உலகில் நன்கு அறியப்பட்ட IBM நிறுவனமும், நியூ மெக்சிகோவிலிருக்கும் லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வுச் சாலையும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட்ரன்னர்’ (Roadrunner) என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

IBM இதற்கு முன் உருவாக்கிய அதிவிரைவுக் கணினியான ப்ளூ ஜீன் (Blue Gene)-ஐக் காட்டிலும் இது இருமடங்கு வேகமாக செயல்படும். ஓர் ஒப்பீட்டிற்காக ப்ளூ ஜீன் அதிவிரைவுக் கணினி அதற்கடுத்த அதிவிரைவுக் கணினியைவிட மும்மடங்கு வேகத்தில் கணக்கீடுகள் செய்ய இயலும்.

மேலும்…..

 

எவ்வ்வ்வ்வளவு பெரிய்ய்ய்யய்ய வாழைத்தார்!

 

ஆடியோ வீடியோ ஒலிஒளி எடிட்டிங் மென்பொருட்கள் (இலவசமாகவே) *

mp3 cutter
divx bundle serial
free wma – mp3 converter
free ipod-video converter
video convert master
magic music editor
free dvd mp3 ripper
mypodcast recorder
audacity win
free flv to mp3
vcd cutter full
——————————

வீடியோ மற்றும் ஆடியோ (ஒளி ஒலி) ஆகியவற்றை எடிட்டிங் செய்ய பல்வேறு மென் பொருட்கள் இருந்தாலும் இலவசமாக சேவை வழங்கும் பல்வேறு மென்பொருட்களை தொகுத்து வழங்கி நற்சேவை புரிந்த ‘தமிழ்2000′ பதிவைப் பாராட்டுகிறோம். நன்றிக் கடனாக கொஞ்சம் அப்பதிவுக்கு சென்று விட்டு பிறகு உங்கள் எடிட்டிங் வேலையைத் தொடங்கலாமே!

இங்கே கிளிக்குங்கள்

தமிழில் மின்னூல் தயாரிப்பது எப்படி?

இணையத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் மின்நூல்கள் ( E -Books ) கிடைக்கின்றன. ஆனால் நமது தாய்மொழியான தமிழில் மின்நூல் என்பது கிடைப்பதற்கு அரிதாகவே இருக்கிறது.காரணம்:

  • மின்நூல் எவ்வாறு உருவாக்குவது என்பது நிறைய பேருக்கு தெரியாது.
  • பலருக்கு தமிழில் மின்நூல் சாத்தியமே இல்லை என்ற எண்ணம்.
  • பெரும்பாலோனோர் அதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.
  • பலர் தமிழில் எழுத முன்வருவதில்லை.

தமிழில் மின்நூல் தயாரிப்பது எப்படி?

மிகவும் எளிமை தான். யான் இதைத்தான் 2 வருடங்களாக பயன்பத்தி வருகிறேன்.

தேவை:
சாதாரண ( MS Word ) கோப்பை மின்நூலாக மாற்றுவதற்கான மாற்றி ( PDF Converter ). இதற்கு பிரிமோ பிடிஎஃப் என்ற செயலி உதவுகிறது.

மேலும்…..

கூகிளின் அனைத்து இணைய சேவைகளும் இங்கே…

கூகிள் நிறுவனத்தின் இணைய சேவைகளில் நாம் அதிகம் அறிந்திராத பல சேவைகள் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் கூகிள் தன்னுடன் இணைத்து கொண்டுள்ள இணைய நிறுவனங்களும் அடங்கும்.

கூகிளின் அனைத்து இணைய சேவைகளும் இங்கே

இது ஒரு பிரெஞ்சு தளமாக இருந்தாலும் பட்டியல் ஆங்கிலத்திலேயே உள்ளது.

நன்றி:http://premkg.blogspot.com/2008/05/blog-post_1573.html

தமிழ் இணைய உலகில் இ.கலப்பை – தமிழ்ஓசை செய்தி

ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி எந்தக் கணிப்பொறியிலும் தட்டச்சுச் செய்யலாம்.ஆனால் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி ஒரு கணிப்பொறியில் தட்டச்சுச் செய்தால் அந்த எழுத்துகளை வேறொரு கணிப்பொறி படிக்காது.அவ்வாறு படிக்க முடியாததால் ஒருவர் உருவாக்கிய செய்தி மற்றவருக்குப் பயன்படாமல் இருந்தது.அனைத்து கணிப்பொறிகளும் புரிந்துகொண்டு படிக்கும்படியான ஒருங்கு குறி(யுனிகோடு) வடிவம் இருந்தால் நல்லது என்ற நிலையைத் தமிழ்க் கணிப்பொறி நுட்பம் அறிந்த வல்லுநர்கள் அறிந்தார்கள்.
மலேசிய கடைத் தெருக்களில் இருந்த இணைய உலவி நடுவங்களுக்குச் சென்ற கணிப்பொறி வல்லுநர் சீனமொழிக்காரர்கள் எந்த இடையூறும் இல்லாமல் அவர்களின் தாய்மொழியான சீனமொழியில் தட்டச்சுச் செய்தனர்.எழுத்துருச் சிக்கல் அவர்களுக்கு இல்லை.தமிழில் அவ்வாறு செய்யமுடியவில்லையே என அவர் உள்ளம் ஏங்கியது.தமிழர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் தமிழ் எழுத்துகளைத் தட்டச்சுச் செய்ய வேண்டும் அதற்குரிய மென்பொருளை உருவாக்க வேண்டும் என அந்த உள்ளம் நினைத்தது. தன்னுடன் பணிபுரிந்த நண்பர்களின் ஒத்துழைப்பு,ஊக்க உரைகளால் ஒருங்குகுறி வடிவில் தட்டச்சிடும் ஒரு விசைப்பலகையை அந்த இளைய உள்ளம் கண்டுபிடித்தது.

தன்னலங் கருதாமல் தமிழ்நலம் கருதி இலவசமாக வழங்கிய அந்த மென்பொருள்தான் இ.கலப்பை எனபதாகும்.இதனை இணையத்திலிருந்து இலவசமகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தமிழில் நிலவி வந்த எழுத்துரு சிக்கலுக்குத் தீர்வு சொன்ன இந்த இ.கலப்பையை உருவாக்கியவர் இளைஞர் முகுந்தராசு அவர்கள்.இணைய உலகில் முகுந்த் என்று அறிமுகமான பெயர்.

மேலும் தொடர…..

ஜிமெயில் இப்போது தமிழில்

உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் பார்த்து உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கின் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ சொடுக்கி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பொத்தானை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.(படத்தை பெரிதாக்க மேலே சொடுக்கவும்)மேலும் தொடர……

செல்போன் மிஸ்ஸிங்கா? கவலை வேண்டாம்

செல்போன் மிஸ்ஸிங்கா? கவலை வேண்டாம்

 

செல்போன் என்பது தற்போது ஒரு மினி கணினியாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் முதல் கோப்புகள் வரை அனைத்து விதமான தரவுகளையும் நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.

அப்பேர்ப்பட்ட செல்பேசி தொலைந்து போய் விட்டால் அத்தனைத் தரவுகளும், முக்கிய முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாடிக்கையாளர்கள் தற்போது திரும்பப் பெற்று விட முடியும்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆன் மொபைல் குளோபல் என்ற நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அதாவது தொலைந்த தரவுகளை மீட்டெடுக்கும் சேவைகளுக்காக இந்த ஒப்பந்தத்தை தன் வாடிக்கையாளர்களுக்காக பார்தி ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

முதலில் இந்த சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த வசதி ஜாவா உள்ள உயர் தொழில்நுட்ப செல்பேசி சாதனங்களில் மட்டுமே சாத்தியம்.